* தரமான கல்வி வழங்க காமராஜர் பெயரில் நவீன உண்டு, உறைவிட வசதிகளுடன் சிறப்பு பள்ளிகள் அமைக்கப்படும்.
* மாணவர் தங்குமிட வசதியை மேம்படுத்த ரூ.10 கோடி மூலதனம்.
* ரூ.2000 கோடியில் கல்லூரி மாணாக்கருக்கு வெற்றி மடிக்கணினி திட்டத்திற்கு ஒதுக்கீடு.
* அரசு நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
* பள்ளிப் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டு கற்றல் வெளிப்பாடுகளில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவாக்கப்படும். இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் 6-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* 2031ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
* அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் SSC, RRB, IBPS போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகள் அமைக்கப்படும். இதற்காக ரூ.3.38 கோடி நிதி ஒதுக்கீடு.
* ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதை நோக்கமாக கொண்டு மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும், ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
இந்தப் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44, 527 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடியும் தவெக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.