“Madam, please send the password”: Thief who stole an iPhone makes an unusual request to the woman.-மேடம் பாஸ்வேர்டு அனுப்புங்கள்: ஐபோனை திருடிச்சென்ற திருடன் பெண்ணிடம் நூதன கோரிக்கை

Spread the love

ரயில்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவில் மொபைல் போன்கள் திருடப்படுவது வழக்கமாக நடக்கும் ஒன்றாக இருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூனில் இது போன்று நடந்த ஒரு திருட்டு வைரலாகி இருக்கிறது. கௌஷிகி தியானி என்ற பெண்ணின் ஐபோன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. ஐபோனை திருடி சென்ற நபர் பின்னர் அப்பெண்ணை தொடர்பு கொண்டு போனின் பாஸ்வேர்டு அனுப்பி வைக்கும்படி கேட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அப்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், செப்டம்பர் 12ம் தேதி கிளமென்ட் டவுனில் இருந்து அவரது ஐபோன் மற்றும் அவரது நண்பரின் சகோதரர் சக்ஷாம் நேகி மற்றும் பலரின் தொலைபேசிகள் திருடப்பட்டன.

அப்பகுதியில் வசிப்பவர்களிடமிருந்து மடிக்கணினிகள், மேக்புக்குகள், மொபைல் போன்கள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதிப்புமிக்க பொருட்களும் திருடப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும், புகார்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும், சில நேரங்களில், புகார்கள்கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பாஸ்வேர்டு கேட்டு வந்த மெசெஜ்

பாஸ்வேர்டு கேட்டு வந்த மெசெஜ்

தனது ஐபோனை திருடிச்சென்ற நபர் தன்னைத் தொடர்புகொண்டு போன் பாஸ்வேர்டு கொடுக்கும்படி கேட்டார். தனது ஐபோனுக்கான பாஸ்வேர்டு கேட்டு எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்தது”‘அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களைப் பதிவு செய்ய போராடிக்கொண்டிருக்கும்போது ​​திருடப்பட்ட தொலைபேசியை வைத்திருந்ததாகக் கூறப்படும் நபர் பாதிக்கப்பட்ட நபரை நேரடியாக தொடர்பு கொள்ள முடிவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். திருட்டுகள் தனது வீட்டில் மட்டும் நடக்கவில்லை என்றும், ஒரே கட்டிடத்தில் இருந்து 5-6 மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார். அவரது வீட்டில் அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிக்குள் நடந்துள்ளது. வேறு சில வீடுகளில் திருடிவிட்டு கடைசியாக அப்பெண்ணின் வீட்டில் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் 16 திருட்டு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *