Man Eater: அதே புலி, அதே இடம்; மேலும் ஒருவரைக் கொன்று தின்ற ஆட்கொல்லியால் அச்சத்தில் உறைந்த மக்கள்!

Spread the love

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகில் உள்ள ஓவேலி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பாலகிருஷ்ணன் வீட்டின் அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வராத காரணத்தால், அதனைச் சீரமைப்பதற்காக கடந்த 9- ம் தேதி தனியார் காபி தோட்டத்தை ஒட்டிய பகுதிக்குச் சென்றபோது புலி தாக்கிக் கொல்லப்பட்டார். அவரின் உடல் பாகங்களையும் அந்தப் புலி தின்றுச் சென்றது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத அவரின் உடலில் கை, கால் உள்ளிட்ட சில பாகங்கள் மட்டுமே காட்டில் கிடந்தன. வனத்துறையின் அலட்சியம் காரணமாகவே குடியிருப்புக்கு அருகில் புலி தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

புலி தாக்குதல் சம்பவம்

புலி தாக்குதல் சம்பவம்

மனிதனைக் கொன்று தின்ற அந்தப் புலியை தீவிரமாக கண்காணித்து மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக வனத்துறையினர் உத்தரவாதம் அளித்திருந்தனர். இந்த நிலையில், அதே லாரஸ்டன்‌ பகுதியில் விவசாயி ரவிச்சந்திரன் என்பவரை இன்று மதியம் அதே புலி தாக்கிக் கொன்று அவரின் உடல் பாகங்களையும் தின்றுள்ளது. அதே போன்று ரவிச்சந்திரனின் கை, கால்களும் தனித்தனியாக காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து மனிதர்களை வேட்டையாடி உண்ணும் ஆட்கொல்லி புலியால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *