Meesaya Murukku 2 Review: கமர்ஷியல் பார்முலாவில் காணாமல்போகும் இசை அரசியல்! படமாக எப்படி? | Review of the movie ‘Meesaya Murukku 2’, starring HipHop Tamizha Adhi.

Spread the love

கதையில் முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரமாக இல்லாததால், கேதிகா சர்மா தான் இருப்பதாகப் பதிவு மட்டுமே செய்கிறார். ‘இசையில என்ன மேல கீழே’ எனப் பாகுபாட்டைக் கேள்வி கேட்கும் கதாபாத்திரத்தில் வரும் ரம்யா ரங்கநாதன், அதில் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பைத் தந்து பாராட்டுகளைப் பெறுகிறார். கேமியோ அளவிலான கதாபாத்திரத்தில் வந்தாலும் கவனம் பெறுகிறார் நடிகை சைத்ரா ஜே.ஆச்சார்.

மீசைய முறுக்கு 2 விமர்சனம் | Meesaya Murukku 2 Review

மீசைய முறுக்கு 2 விமர்சனம் | Meesaya Murukku 2 Review

காமெடி ஆர்கெஸ்ட்ராவுக்குப் பொறுப்பேற்றிருக்கும் ஹர்ஷத் கான், விஜய் வரதராஜ், யோகி பாபு ஆகியோர் கலகலப்பூட்டுகிறார்கள். இது சில இடங்களில் டப்பாசு! ஆனால், பெரும்பாலான இடங்களில் ‘டிம்மு டிப்பு’ மட்டுமே அடிக்கிறது. பாசத்தோடு கலகலப்பையும் கலந்துவிட்ட கதாபாத்திரங்களில் வரும் பாபா பாஸ்கர் மற்றும் கருணாஸ், குறைவில்லாத நடிப்பைத் தந்து கெலிக்கிறார்கள். இவர்களைத் தாண்டி நாசர், கருணாகரன், பகவதி பெருமாள், ஷா ரா ஆகியோர் வருகிறார்கள், அவ்வளவே! இதனைத் தாண்டி சில இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் முகங்கள், சர்ப்ரைஸ் கதாபாத்திரங்கள் அட்டெண்டன்ஸ் போடுகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *