Microsoft: 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம்! ஏன் இந்த முடிவு? இந்தியாவில் எத்தனை பேர்? | Microsoft Voluntary Retirement Plan for 60,000 Employees

Spread the love

இந்தியாவில் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களுக்கு, பணியாற்றிய ஒவ்வொரு நிறைவடைந்த ஆண்டுக்கும் ஒரு மாத அடிப்படைச் சம்பளம், மருத்துவக் காப்பீடு மற்றும் அடுத்த வேலைவாய்ப்பைத் தேடுவதற்கான தொழில் வழிகாட்டுதல் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. திட்டத்தை ஏற்க விரும்பும் தகுதியான இந்திய ஊழியர்கள் டிசம்பர் 1-க்குள் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 24,000 பேருக்கு பாதிப்பா?

இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சுமார் 24,000 பேர் பணியாற்றுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர்களில் எத்தனை பேருக்கு இந்தத் திட்டம் பொருந்தும் அல்லது எத்தனை பேர் வெளியேற முடிவெடுப்பார்கள் என்பதை நிறுவனம் வெளியிடவில்லை. எனவே, இந்தியாவில் பணியாற்றும் அனைவரும் வேலை இழக்கப்போகிறார்கள் என்று கூறுவது தவறான புரிதலாகும்.

மொத்தத்தில், இது 60,000 பேரைப் பணிநீக்கம் செய்யும் அறிவிப்பு அல்ல மாறாக குறிப்பிட்ட ஊழியர்களுக்கு நிதி உதவியுடன் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதற்கான விருப்பத்தை வழங்கும் திட்டமாகும். இதன் மூலம் நிறுவனம் எவ்வளவு செலவைச் சேமிக்கும், செயற்கை நுண்ணறிவு முதலீடுகள் வேலைவாய்ப்புகளை எவ்வாறு மாற்றும் என்பவை தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டிய கேள்விகளாக உள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *