NEET: “முதல்வர் திரைப்படங்களில் மட்டுமே ஜனநாயகவாதியா?”- தமிழக மாணவர்கள் கைதுக்கு சீமான் கண்டனம்| seeman condemns tvk government for arresting students in tn

Spread the love

என்னவொரு கூத்து!

பாஜகவை சித்தாந்த எதிரி என்று கூறிக்கொண்டே, ரகசியமாக அவர்களின் நலன்களுக்குச் சேவை செய்வது தவெக அரசின் மறைமுகச் சேவை அல்லவா? என்னவொரு கூத்து!

வடமாநிலங்களில் நடக்கும் போராட்டங்கள் நீட் தேர்வில் உள்ள முறைகேடுகளைக் கண்டிக்கும் அதே வேளையில், தமிழகத்தில் மட்டுமே நீட் அமைப்பே ஒரு மோசடி என்பதை வலியுறுத்திப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

முந்தைய முறையை விடச் சிறந்தது என்று கூறி, தரமான மருத்துவர்களை உருவாக்குவது என்ற போர்வையில் கொண்டு வரப்பட்ட ஒரு அமைப்பில் இத்தனை முறைகேடுகளும், குழப்பங்களும், குளறுபடிகளும் நடக்கும்போது, இந்தத் தேர்வு முறையின் நோக்கம் தான் என்ன? கடந்த காலத்தில் இதே நீட் அமைப்பில் முறைகேடுகள் நடக்கவில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

முதல்வர் விஜய் - பிரதமர் மோடி

முதல்வர் விஜய் – பிரதமர் மோடி

சமத்துவமற்றது…

எனவே, நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை விசாரிப்பது மட்டுமின்றி, இந்த மோசடியான நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்வதே நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான சிறந்த வாய்ப்பாகும். சீரான கற்றல் வாய்ப்புகளும் வசதிகளும் இல்லாத ஒரு நாட்டில், ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை நடத்துவது இயல்பாகவே சமத்துவமற்றது. எனவே, சமத்துவத்திற்கு எதிரான நீட் தேர்வை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்படட்டும்!

அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கும்போது, அவை பெரும்பாலும் அடையாள ஆர்ப்பாட்டங்களாகவே பார்க்கப்படுகின்றன. இருப்பினும், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வீதிக்கு இறங்கிப் போராடும்போது, அது ஒரு ஜனநாயகப் புரட்சியாக வெடித்து, ஆளும் வர்க்கத்தைப் பணிய வைத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றச் செய்கிறது. இலக்கை நோக்கி உழைக்கும் இளைஞர் திரளின் அமைதியான போராட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன். தமிழக இளைஞர்களின் அமைதியான போராட்டம் வெற்றி பெறட்டும்!

நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்படட்டும்! அநீதிக்கு எதிராகப் போராட்ட குணத்துடன் போராடும் எனது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் அன்பும்!” என்று பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *