NEET விவகாரம் விஸ்வரூபம்… அமைச்சர் மகள் நைமிஷா Instagram-ஐ மூடினாரா? – Kumudam

Spread the love

இந்தியாவில் கல்வித்தரம் நன்றாக தானே இருக்கிறது.பின்னர் ஏன் அமைச்சர்களின் பிள்ளைகள் வெளிநாடுகள் எல்லாம் சென்று கல்வி கற்கின்றனர் என்று  தர்மேந்திர பிரதான மகளிடம் இணையவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு கண்டித்து கரப்பான் பூச்சி கட்சி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில்  இது தற்போது மிக பெரும் போராட்டமாக வெடித்துள்ளது.

இந்த போராட்டம் காவல்துறையின்  செயல்முறைகளால் கலவரமாக வெடித்துளள நிலையில் உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் இதில் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மகள் நைமிஷா பிரதான் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியுள்ளார்.நீட் தேர்வு முறைகேடுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் போரட்டம் வலுப்பெற்று வரும் நிலையில்,தற்போது அவர் எந்தவொரு பொறுப்புக்கூறலையும் எடுத்துக் கொள்ளாத நிலையில் அவரது மகளின் இணைய கணக்கு முகவரியை டேக் செய்து இணையவாசிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

தர்மேந்திர பிரதான்  மகள் நைமிஷா அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைகழகத்தின் பிளெட்சர் சட்டம் மற்றும் துதரகப் பள்ளியில் தனது உயர்கல்வி மற்றும் பட்டப்படிப்பை முடித்தார். இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான நடுத்தரக் குடும்ப மாணவர்கள் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரின் மகள் மட்டும் வெளிநாட்டில்  பயின்றதைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதனால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குவிந்த கடுமையான எதிர்ப்பும் மற்றும் அவரது தந்தையை பதவி விலகக் கோரிய விமர்சனங்கள் காரணமாக தற்போது தனது இன்ஸ்டாகிராம் கணக்கை நைமிஷா முடக்கியுள்ளார்.

 

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *