Nepal: “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் நிலை தெரியவில்லை..!” – கலங்கும் தெருவாசிகள்!

Spread the love

இந்நிலையில், கும்பகோணம் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் சென்ற ஏஜென்சியால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் உட்பட 57 நபர்களில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் யாத்ரா ஏனென்சியின் உரிமையாளர் மகன் சையத் உமர் பாரூக்கின் நிலையும் என்னவென்று தெரியவில்லை என்கிறார்கள்.

டாக்டர் கேதாரா கெளரியின் பெற்றோர்

டாக்டர் கேதாரா கெளரியின் பெற்றோர்

இந்தச் சூழலில், கும்பகோணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பா, அம்மா, மகள் ஆகிய மூன்று பேரின் நிலை தெரியாததால், அவர்கள் வசித்த தெருவில் உள்ள மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இது குறித்து அப்பகுதியினர் பேசுகையில், “கும்பகோணம் கர்ண கொள்ளை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சாய்நாத் (73). இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் மனைவி ஜெயலட்சுமி (64) மற்றும் திருமணம் ஆகாத இவர்களது ஒரே மகள், டாக்டர் கேதாரா கௌரி (32). இவர்கள் மூன்று பேரும் ரொம்ப சந்தோஷமாக கைலாஷ் யாத்திரை போயிட்டு வர்றோம்னு சொல்லிட்டு போனாங்க.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *