"Nvidia CEO ஜென்சன் ஹுவாங்கை வேலைக்கு எடுப்பது எனக்கு கௌரவம்" – எலான் மஸ்க் பதிவு

Spread the love

உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் மற்றும் பிசினஸ் உலகம் தற்போது Nvidia நிறுவனத்தை மிகவும் உற்றுநோக்கி வருகிறது. என்விடியா பங்குகள் நல்ல பங்குகள் என்பதால் இந்த முக்கியத்துவம் இல்லை.

என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கின் தனிப்பட்ட தகவல்கள் தற்போது வெளியானதுதான் காரணம்.

ஜென்சன் ஹுவாங்கிற்கு சீன உளவாளி பெண்மணி ஒருவருடன் தொடர்பு இருந்திருக்கிறது. அவர் ஜென்சன் ஹுவாங் மூலமாக ஏ.ஐ மற்றும் சிப் துறையில் அமெரிக்காவின் அடுத்தக்கட்ட நகர்வுகளைத் தெரிந்துகொண்டு, சீனாவிற்குச் சொல்லியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எலான் மஸ்க் பதிவு
எலான் மஸ்க் பதிவு

இது குறித்து என்விடியா நிறுவனம் விசாரணைக் குழு ஒன்று அமைத்துள்ளது. ஜென்சன் ஹுவாங்கும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளார்.

ஜென்சன் ஹுவாங் இந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டால், அடுத்து அவரது பணி என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர், ‘ஜென்சனை வேலையை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவிற்கு எலான் மஸ்க், ‘அது ஒரு கௌரவமாக இருக்கும்’ என்று பதிலளித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *