ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் “ஓம்’. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார்.
நவம்பர் 20 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (நவ.5) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், “என்ன பேசலாம்? நாம் என்ன பேசினாலும் ஏதாவது ஒன்று பேசத்தான் போகிறார்கள். அதனால் பேசலாம். ஒரு தம்பி சொன்ன மாதிரிதான்… எல்லோருக்கும் ஹார்ட் லப்டப் லப்டப்னு துடிக்கும். ஆனால் எனக்கு Fans… Fans என்றுதான் துடிக்கும்.