OTP இல்லா பேமென்ட்: RBI புதிய நடைமுறை|No More OTP Hassle! RBI Simplifies Recurring Payments

Spread the love

இது கிட்டத்தட்ட ‘ஆட்டோ டெபிட்’ போன்ற ஆப்ஷன் தான்.

ஆனால், ஆட்டோ டெபிட்டிற்கும், இந்த நடைமுறைக்கும் என்ன வித்தியாசம் என்றால்…

ஆட்டோ டெபிட்டில் சத்தமே இல்லாமல், நம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் சென்று கொண்டிருக்கும்.

ஆனால், இந்த புதிய நடைமுறையின் படி, பேமென்ட் செல்வதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு, இது குறித்த அலர்ட் மெசேஜ் உங்களுக்கு வந்து சேரும்.

அந்த நேரத்தைப் பயன்படுத்தி பேமென்ட்டை கேன்சல் செய்ய நினைத்தாலும் கேன்சல் செய்துவிடலாம்.

கேன்சல் செய்யும் நடைமுறை மிக மிக எளிது.

எத்தனை காலத்திற்கு இந்தப் பரிவர்த்தனை நடக்க வேண்டும் என்பதை செட் செய்துகொள்ளலாம்.

இந்த நடைமுறைக்காக வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் பெற முடியாது.

ஆட்டோ டெபிட் சில ஆப்களில்தான் இருந்து வந்தது. இப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த நடைமுறையின் படி, பெரும்பாலான நிதி பரிவர்த்தனைகளுக்கு வந்துவிட்து.

ஆட்டோ டெபிட்டை விட, இந்த புதிய நடைமுறை இந்திய ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் வருவதால் பாதுகாப்பானது.

மேலும் ரூ.15,000-க்கு மேல், நமக்கு தெரியாமல் பணப் பரிவர்த்தனை நடந்துவிடாது என்பதால், அது நம்முடைய பாதுகாப்பு பக்கத்திலேயே எப்போதும் இருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *