PMK Reunion… அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்! – Kumudam

Spread the love

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ரீயூனியன் ஆரம்பமாகி உள்ளது.அன்புமணிக்கு எதிரான சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில்,சமீபத்தில் நம் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று பாடலுக்கு ஏற்றவாறு இருவரும் அன்புமழையில்  நனைந்தனர்.

இந்நிலையில் தற்போது அன்பு கூட்டுக்குள் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே பாமக இரு பிரிவாக செயல்பட்டது.ராமதாஸ் தலைமையில் ஒரு அணியினரும் அன்பு மணி தலைமையில் மற்றொரு அணியினரும் பிளவுபட்டது.

இதனையடுத்து சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த அன்புமணி பாமக பெயர், கொடி மற்றும் சின்னத்துடன் பரப்புரையில் ஈடுபட்டார்.இது ராமதாஸ் தரப்பினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் பாமக சின்னம், கொடி மற்றும் பெயர் பயன்படுத்துவதை தடை விதிக்க  வேண்டும்  என்றும் பாமக தலைவராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்றும் வழக்கில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அன்புமணியுடன் அவர் இணைந்து அன்பு மழையில் குடும்பமே  நனைந்த நிலையில் தற்போது தனது மகனுக்கு எதிராக  தொடர்ந்து வழக்கை ராமதாஸ் திரும்பப் பெற்றுள்ளார்.

இது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. தங்களுக்குள் இருந்த பிரச்சனை தற்போது சுமூகமாக மாறியுள்ளதால் எதிராக தொடரப்பட்ட வழக்கினை திரும்பப் பெறுவதாக ராமதாஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கினை முடித்து வைத்துள்ளது.

இந்த முடிவு தற்போது பாமகவில் முககிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.ஏற்கனவே கட்சி பொறுப்புகளை அன்புமணியிடம் ஒப்படைத்து விட்டு ராமதாஸ் ஓய்வு எடுக்க போவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக தன்னை பாமக தலைவராக அங்கீகரிக்க வேண்டுமென தொடர்ந்த வழக்கினை ராமதாஸ் திரும்ப பெற்றுள்ளார்.

இதன் காரணமாக மகன் அன்புமணிக்கு அவர் வழிவிட்டு விட்டார் என இணையத்தில் பேசப்பட்டு வருகின்றது. இதனிடையில் ராமதாஸ் அன்புமணி மீண்டும் ஒன்றிணைந்த நிலையில் பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.பாமகவில்  நிலவிய பிரச்சனையால் அவர் ராமதாஸுக்கு ஆதரவாக செயல்பட்டார். இந்நிலையில் இருவரும் சேர்ந்ததை தொடர்ந்து இந்த முடிவினை தேர்தலுக்கு முன்பாகவே எடுத்து இருக்கலாம். ராமதாஸை நம்பி பல கோடி ரூபாய் செலவு செய்து கடனாளியாக மாறியுள்ளோம். 

எங்களை நடுரோட்டி விட்டு விட்டார் என ராமதாஸ் மீது விமர்சனங்களை முன்வைத்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் அருள். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் இருந்தும் தங்களுக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.

அதோடு தங்களின் முடிவினை விரைவில் அறிவிப்போம் எனவும் தெரிவித்த அருள், அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளவே மாட்டோம் எனவும் திட்டவட்டமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *