Polling: சேலம் 88%, ஈரோடு 87% மாலை 5 மணிக்கே உச்சம் தொட்ட வாக்கு சதவிகிதம்! காரணம் என்ன? -polling percentage increased in tn election .

Spread the love

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிகத்து வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு விழுக்காடு உயர்ந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கொளுத்தும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்குப்பதிவு மையங்களுக்குச்‌ சென்று தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவு இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டி வருகிறது.

இளம் வாக்காளர்

இளம் வாக்காளர்

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு விழுக்காடு உயர்ந்திருப்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் , ” காலையில் இருந்தே தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு விழுக்காடு அதிகமாக காணப்பட்டது. மாலை 5 மணி நிலவரப்படி அதிகபட்சமாக கரூரில் 89.32 சதவிகிதம், சேலத்தில் 88 சதவிகிதம், ஈரோட்டில் 87.59 சதவிகிதம் என உச்சம் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு வாக்குப்பதிவு சதவிகிதம் உயர்ந்திருப்பது உண்மை தான். டபுள் என்ட்ரி முதல் இறந்தவர்களின் வாக்குகள் வரை எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இளம் தலைமுறை மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களின் எழுச்சியும் இந்த தேர்தலில் அளவுக்கு அதிகமாக காணப்படுகிறது. இவற்றின் காரணமாகவே யாரும் எதிர்பார்க்காத வகையில் வாக்குப்பதிவு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம் வருகின்ற மே 4 – ம் தேதி தெரியவரும்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *