தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது மாணவர் பிரணவ் இளங்கோ, அமெரிக்காவின் புகழ்பெற்ற Brown பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பைத் தொடர ரூ.3.55 கோடி மதிப்பிலான முழு உதவித்தொகையைப் பெற்றுள்ளார்.
CS Academy, Erode பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து வரும் பிரணவ், அமெரிக்காவின் புகழ்பெற்ற Brown University-யில் Public Health மற்றும் Applied Mathematics துறைகளில் தனது உயர்கல்வியைத் தொடரவுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கான அவரது கல்விக் காலத்தில் கல்விக் கட்டணம் மற்றும் வாழ்வாதாரச் செலவுகளை உள்ளடக்கும் வகையில் இந்த உதவித்தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கணிதம், தொழில்நுட்பம் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி சிக்கலான பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அதற்கான தீர்வுகளை உருவாக்குவதில் பிரணவ் ஆர்வம் கொண்டுள்ளார். குறிப்பாக, தரவுகளின் அடிப்படையில் பொது சுகாதாரத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரது எதிர்கால நோக்கமாகும்.