Prominence : “ஷாருக்கானிடம் ஐடியாவைச் சொன்னோம்; அவரும் கை கோர்த்தார்” – நிர்வாக இயக்குநர் நந்தகுமார் | Prominence Interior design modular company new showroom opening

Spread the love

மேலும், அவர்களின் தயாரிப்புகள் பற்றியும் அவற்றின் தேவைகள் பற்றியும் எளிய முறையில் கவி பாரதி மற்றும் இந்து ஆகியோர் விளக்கினார்கள்.

மேலும் Prominence நிர்வாக இயக்குநர் நந்தகுமார், பிரமாண்ட கிளை மற்றும் நிறுவனத்தின் நோக்கங்கள் பற்றி விளக்கினார்.

அவர் கூறியதாவது, “இன்டீரியர் என்பது ஆடம்பரம் என்பதை, இன்று நாங்கள் அத்தியாவசியம் என்று மாற்றுகிறோம். நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் அதிகப்படியான வாய்ப்புகளை வழங்குகிறோம். மேலும் எங்களின் நிறுவனம் தான் தென்னிந்தியவில் இன்டீரியர் பொருள்களுக்கு முதன் முதலில் BIS(Burea of Indian standards) மற்றும் ISO9001:2015 போன்ற தரச்சான்று பெற்ற நிறுவனம்.

E0 (formaldehyde emission test), adhesion test, coating thickness test, salts spary test போன்ற பல தரப்பட்ட சோதனைகளுக்கு பிறகே நாங்கள் எங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம்களிடம் ஒப்படைக்கிறோம். அதுவும் 45 நாட்களுக்குள் என்ற உத்திரவாதம் கொடுக்கிறோம். எங்களின் பொருட்கள் அனைத்தும் ஜெர்மானிய தர தொழில் நுட்பத்துடன் இந்திய காலநிலைகளுக்கு ஏற்ப தயாரிக்கிறோம்.

எங்களின் பொருட்கள், வசதி படைத்த மக்களுக்கு மட்டும் அல்ல. நடுத்தர குடும்பத்தினருக்கும் ஏற்ற வகையில் குறைந்த செலவில் நிறைவான தரத்தில் அவர்களிடம் சேரும் படி உழைத்து வருகிறோம். அடுத்ததாக இந்தியாவில் மிகப்பெரிய வீட்டு வேலைகளுக்கான உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளோம்” என்றார் விரிவாக.

விளம்பர தூதுவராக ஷாருக்கான் எப்படி வந்தார்?

Prominence Home works நிறுவனத்தின் விளம்பர தூதுவராக ஷாருக்கான் எப்படி வந்தார் என்ற கேள்வியை அவரிடமே முன்வைத்தோம் …

“எங்களின் இந்த ஐடியா இந்தியா முழுவதும் சென்று சேர வேண்டும் என்று யோசித்த போது முதலில் ஷாருக்கான் தான் எங்களுக்கு தோன்றினார். பின்னர் அவரை அணுகி எங்களின் ஐடியாவை கூறினோம். அவருக்கு பிடித்து போனதால் அவரும் எங்களுடன் கை கோர்த்தார்” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *