Rain Alert: உருவாகிறதா குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி? அக். 26 வரை கனமழை; உங்க ஊரில் எப்போது?

Spread the love

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது.

தற்போது இந்திய வானிலை மையம் கொடுத்துள்ள எச்சரிக்கையின்படி, “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழகக் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இதனால், வருகிற அக்டோபர் 26 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை தொடர வாய்ப்புள்ளது.

மழை
மழை

சென்னை வானிலை மையம் இன்று மாலை 4.09 மணிக்குக் கொடுத்துள்ள அப்டேட்டின் படி,

21.10.2026:

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

22.10.2026:

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

23.10.2026:

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, அரியலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

24.10.2026:

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

25.10.2026:

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்கள், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

26.10.2026:

சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *