Rain Alert: கொட்டித் தீர்த்த கனமழை; 26 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; சென்னை நிலவரம் என்ன?| Rain Alert: Heavy downpour; rain warning issued for 26 districts; what is situation in Chennai?

Spread the love

ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய 26 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக சென்னை மற்றும் புகா் பகுதிகளிலும் இன்றும் நாளையும் (அக். 23, 24) இரு நாள்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதேபோல அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் வானிலை முன்னறிவிப்புகளைப் பின்பற்றிச் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *