தஞ்சாவூர்: ”கோயில் புதுபிக்கும் பணிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்”- தோழியுடன் இணை ஆணையர் கைது! | hanjavur hrnc jc jothilakshmi bribery in arrest

Spread the love

பின்னர் போலீஸாரின் ஆலோசனையின்படி, மதியழகன் பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளுடன் தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு இணை ஆணையர் ஜோதிலட்சுமி, அவரது தோழி கிரிஜா ஆகியோரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டீம் அவர்களை கைது செய்து பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பிலோமினா நகரில் உள்ள ஜோதிலட்சுமியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். பின்னர் இருவரையும் கும்பகோணம் சிறையில் அடைத்தனர். இவர் திருவண்ணாமலையில் பணியாற்றிய போதும் இருவர் குறித்தும் சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *