Ramayana – Part 1 Review: பாலிவுட்டின் ஃபேண்டஸி விருந்து – இந்தியாவின் பிரமாண்ட சினிமா சாதிக்கிறதா? | Ranbir Kapoor and Yash starrer Ramayana – Part 1 Review

Spread the love

இரண்டாம் பாதியில் மீண்டும் ராவண அத்தியாயம், சூர்ப்பணகையின் காதல், அசுரர்கள் இடத்தில் நடக்கும் போர் என முடிந்தளவு 3டி-க்கும் பிரமாண்டத் தொழில்நுட்பங்களுக்கும் வேலை வைத்துக்கொண்டே இருக்கின்றனர். எது அசல், எது கிராபிக்ஸ் எனப் பிரிக்க முடியாத அளவுக்கு வனத்தின் காட்சிகளைப் பிரமாண்டமாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறது பங்கஜ் குமார் – மகேஷ் லிமாயே கூட்டணியின் ஒளிப்பதிவு. வனவாசம் கிளம்பும் காட்சியை அத்தனை ஆழமான உணர்ச்சிகளின் குவியலாக மாற்றியிருக்கிறது ஏ.ஆர்.ரஹ்மான் – ஹேன்ஸ் ஜிம்மர் கூட்டணியின் பின்னணி இசை. ஆங்காங்கே ஏ.ஆர்.ரஹ்மானின் பழைய பாடல்கள் நினைவுக்கு வருவதை மட்டும் தவிர்த்திருக்கலாம்.

இவை அனைத்தையும் கடந்து, நிச்சயமாக இந்த ராமாயணத்தின் ஹீரோ படத்தின் தொழில்நுட்பக் குழுதான். பிரமாண்ட அரக்கர்கள், இலங்கை வனம், அரண்மனைகள், ஜடாயு வடிவமைக்கப்பட்ட விதம், புஷ்பக விமானத்தில் நடக்கும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி என அனைத்திலும் பேருழைப்பைப் போட்டிருக்கிறது படக்குழு. ஆஸ்கர் தூரமில்லை!

கூடுதல் சிறப்பாகத் தமிழ் வசனங்களுக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களின் உதட்டசைவையும் ஏ.ஐ கொண்டு சாத்தியப்படுத்தியிருப்பது நிஜமாகவே தமிழில் எடுக்கப்பட்ட ஒரு படத்தைப் பார்க்கும் உணர்வைத் தந்துவிடுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *