Ranbir Kapoor: “நடிப்பை விட்டு விலகுகிறேனா!?” – தெளிவுபடுத்திய ரன்பீர் கபூர் |ranbir-kapoor-plans-directorial-debut-clarifies-acting-career-remark-ramayana-promotions

Spread the love

அவர் பேசுகையில், “அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் எனது முதல் திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளேன். இதற்காகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பே திரைக்கதை எழுதத் தொடங்கிவிட்டேன்.

திரைக்கதை அமைப்பது என்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை இப்போதுதான் உணர்கிறேன். எனது இயக்கத்தில் உருவாகும் படத்தில் நான் நிச்சயமாக நடிக்க மாட்டேன்.

முற்றிலும் ஒரு இயக்குநராக மட்டுமே பணியாற்றுவேன்” என்றவர், “ஆண்டிற்கு 100 முதல் 125 நாட்கள் மட்டுமே நான் படப்பிடிப்பில் பங்கேற்கிறேன்.

ரன்பீர் கபூர் - Ranbir Kapoor

ரன்பீர் கபூர் – Ranbir Kapoor

இதனால் கதைகள் எழுத எனக்குப் போதிய நேரம் கிடைக்கிறது. ‘நடிப்பில் இது எனது கடைசிப் பத்தாண்டு’ என்று நான் கூறியது, கதாநாயகனாக நான் நடிக்கும் முதன்மையான கதாபாத்திரங்களைக் குறித்தே தவிர, முற்றிலும் நடிப்பை நிறுத்துவது பற்றி அல்ல.

தற்போது கைவசம் உள்ள பெரிய படங்களை முடித்துவிட்டு இயக்குநர் நாற்காலியில் அமர ஆவலாக இருக்கிறேன்” எனப் பகிர்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *