தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.
தமிழ் சினிமாவின் பல்வேறு ஹிட் கமர்ஷியல் படங்களை தயாரித்தவர், இன்று பல தயாரிப்பாளர்களுக்கும் இன்ஸ்பிரேஷன். இவருடைய உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட்டது. அஞ்சலிக்காக, மயிலாப்பூரிலுள்ள அவருடைய இல்லத்தில் உடல் வைக்கப்பட்டிருக்கிறது.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார் விஜய்.
அரசியல் பரபரப்பான விஷயங்கள் நடந்துக் கொண்டிருக்கும் சூழலில், தனக்கு ஆர்ம்பகால சினிமா நாட்களில் உதவியாக இருந்த ஆர்.பி. செளத்ரி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

நடிகர் விஜய்க்கு, “பூவே உனக்காக’, ‘லவ் டுடே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஷாஜகான்’, ‘திருப்பாச்சி’, ‘ஜில்லா’ என விஜய்க்கு 6 திரைப்படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி.
ஆரம்பக்கட்டங்களில், ஆர்.பி. செளத்ரி தனக்கு செய்த உதவிகளுக்கு கைமாறு செய்யவே, ‘ஜில்லா’ திரைப்படத்திற்கு சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தார். தங்களுடைய 100வது படத்தை விஜய்யை வைத்து தயாரிக்க வேண்டும் என்பதுதான் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் விருப்பமாக இருந்தது. ஆனால், விஜய் அரசியல் பக்கம் நகர்ந்ததால், அது நடக்காமல் போனது.