நீங்கள் அரசு ஊழியரா?
பணி ஒய்வு பெறப்போகும் அந்தக் கடைசி நாளை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?
கடந்த முப்பது வருடங்களாக உங்கள் வாழ்க்கை ஒரு அழகான தாள லயத்தில் இயங்கி இருக்கும். ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி விடிந்தால் மொபைலில் ஒலிக்கும் “Salary Credited” என்ற அந்த ஒரு குறுஞ்செய்தி, உங்களுக்குள் ஒரு அசைக்க முடியாத பாதுகாப்பையும் சமூகத்தில் ஒரு தனி அதிகாரத்தையும் தந்தது. ஆனால், பணி நிறைவு பெற்று அந்த அரசு நாற்காலியை விட்டு நீங்கள் கீழே இறங்கும் அந்த ஒரு குறிப்பிட்ட நாளில், அந்த மாதாந்திரப் பாதுகாப்பு வளையம் நிரந்தரமாக நின்றுவிடுகிறது.
உங்களுக்கு முன்னால் ஓய்வுபெற்ற பழைய தலைமுறையினருக்கு “OPS’ என்ற மாதாந்திரப் பென்ஷன் பாதுகாப்பு இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஓய்வுபெறும் உங்களுக்குக் கிடைப்பதோ… பி.எஃப் மற்றும் கிராஜுவிட்டி மட்டுமே!
இதில் கிடைக்கும் பெரிய தொகையைப் பார்த்தவுடன், “இனி நம் வாழ்நாள் முழுக்க எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று மனம் ஒரு தற்காலிக நிம்மதியை அடையும். ஆனால் அங்கிருந்துதான் உங்கள் நிம்மதியைக் குலைக்கும் அந்த ஆபத்தான நாடகமும் தொடங்குகிறது.
உங்களைச் சுற்றியுள்ள உலகம் உங்களுக்குத் தரும் ஒரே அறிவுரை: “பணத்தை அப்படியே பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட்டில் (FD) போட்டுவிடுங்கள், வட்டி பாதுகாப்பாக வரும்” என்பதுதான்.
இத்தனை காலம் அரசு வேலையை மட்டுமே நம்பிய உங்கள் மனதிற்கு, இந்த FD ஒரு ஆபத்பாந்தவனாகத் தெரியும். ஆனால், முதலீட்டில் பாதுகாப்பானது என்று நீங்கள் நினைக்கும் பல விஷயங்கள், நீண்டகாலத்தில் உங்களை மிக மோசமான நிலைக்குத் தள்ளும் தற்காலிகக் கவர்ச்சிகள் மட்டுமே.
இன்று நிலவும் 8% மருத்துவப் பணவீக்கத்திற்கு முன்னால், வங்கி தரும் 6% வட்டி என்பது ஒரு ஓட்டைக் குடை போன்றது. அசல் பணம் அப்படியே இருப்பது போலத் தோன்றும், ஆனால் காலப்போக்கில் அதன் வாங்கும் திறன் பாதியாகக் குறைந்துவிடும்.
இதன் இறுதி முடிவு என்ன தெரியுமா? முப்பது வருடங்கள் கம்பீரமாக வாழ்ந்த ஓர் அரசு அதிகாரி, தனது அறுபது வயதிற்கு மேல் மருந்துச் செலவுக்கும், சொந்தத் தேவைகளுக்கும் தன் பிள்ளைகளின் கையை எதிர்பார்த்து நிற்கும் ஒரு பரிதாப நிலை.

FD-க்கு மாற்று என்ன? ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக இருப்பது எப்படி?
இந்தத் துயரத்தைத் தவிர்க்க உங்களுக்கு ஒரு ‘வழிகாட்டி’ தேவை. அதுதான் மியூச்சுவல் ஃபண்டுகளின் பாதுகாப்பான ஹைப்ரிட் திட்டங்கள் மற்றும் ‘சிஸ்டமேட்டிக் வித்ராயல் பிளான்’ (SWP).
உங்கள் மொத்தப் பணத்தையும் (Lumpsum) ஒரே இடத்தில் முடக்காமல், இந்தத் திட்டத்தில் உங்களின் பணம் கொஞ்சம் நிறுவனப் பங்குகள், கொஞ்சம் தங்கம், கொஞ்சம் கடன் பத்திரங்கள் எனப் பிரித்து முதலீடு செய்யப்படும். இந்த மூன்றும் முறையே 12%, 10% மற்றும் 7% உங்களுக்கு ரிட்டன்ஸ் தரக்கூடியவை.
இதனால் வங்கி வைப்பு நிதியை விட 2-3% அதிகமாக லாபத்தைப் பாதுகாப்பாக பெற முடியும். சந்தை சரிந்தால் பணம் நஷ்டமடையுமா? என்ற கேள்விக்கு, சரியான ஹைபிரிட் திட்டங்களில் 7 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து முதலீடு செய்தவர்கள் இதுவரை நஷ்டம் அடைந்தது இல்லை என்கின்றன புள்ளி விவரங்கள்.

20-40 வயதில் இருக்கும் இளம் அரசு ஊழியர்கள் தங்களின் சம்பளத்தில் முடிந்தளவு 10-30% தொகையை ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில், 60 வயது வரை மாதந்தோறும் தொடர்ந்து முதலீடு செய்து வர வேண்டும். இதனால் ₹1 கோடி ரூபாய்க்கும் மேலான தொகையை எளிமையாக ஈட்ட முடியும். அதன்பின் மாதம் ₹30,000 முதல் ₹50,000 வரை மாதத் தொகையாக எடுத்துக்கொள்ளலாம்!
50 வயதுக்கு மேற்பட்டோர், வங்கி வைப்பு நிதியில் வைத்திருக்கும் பணத்தை மொத்தமாக முதலீடு செய்யலாம். முதலில் ஒரு கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் (Debt Fund) திட்டத்தில் பணத்தைப் போட்டு, பின்னர் STP முறைப்படி அங்கிருக்கும் பணத்தை ஹைபிரிட் ஃபண்டுகளுக்கு மாற்றலாம். இதனால் நஷ்டத்தை தவிர்க்கலாம். பணமும் பாதுகாப்பாக இருக்கும். பின்னர் 2-3 ஆண்டுகள் கழித்து அதிலிருந்து விரும்பிய தொகையை எடுத்துக்கொள்ளலாம்.
₹10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?
உதாரணமாக, நீங்கள் 50 வயதில் முதலீடு செய்யும் 10 லட்சம் ரூபாய், அடுத்த 10 வருடங்களில் 28.39 லட்சமாக வளர்கிறது. அதன்பின், 60 முதல் 80 வயது வரையிலான 20 வருடங்களில் ‘SWP’ முறையில் மாதாந்திர பென்ஷனாக நீங்கள் திரும்பப் பெறும் மொத்தத் தொகையும் அதே 28.39 லட்சம் ரூபாய்தான். அதாவது, உங்கள் ஓய்வுக்கால முதலீட்டை முழுமையாக மாதாந்திர வருமானமாக நீங்கள் திரும்ப எடுத்த பிறகும், 80 வயதில் உங்கள் கணக்கில் மிச்சமிருக்கும் இறுதித் தொகை ₹1.01 கோடி.
இதுவே சாதாரண வங்கி FD-யில் பணத்தைப் போட்டு வட்டியை எடுத்தால், 20 ஆண்டுகள் கழித்து உங்களிடம் இருக்கும் தொகை 20 லட்சம் மட்டுமே. இரண்டுக்கும் 80 லட்ச ரூபாய் வித்தியாசம்! மேலும், நாளுக்கு நாள் உயரும் பணவீக்கத்தால் உங்களின் அசல் பணம் மெல்லக் கரைந்துவிடும்.
மியூச்சுவல் ஃபண்ட் ஹைப்ரிட் + SWP முறை மூலம் மாதாந்திரச் சம்பளத்தையும் தடையின்றி வழங்கி, அதே நேரத்தில் உங்களின் ஆரம்பக்கால முதலீட்டையும் 10 மடங்கு உயர்த்துகிறது.
பிள்ளைகளிடம் கையேந்தாத அந்தத் தற்சார்பு வாழ்க்கைதான் நீங்கள் உழைத்த உழைப்பிற்குச் செய்யும் உண்மையான மரியாதை.
நிலையான வட்டி என்ற மாயையை நம்பி நடுத்தெருவில் நிற்பதா, அல்லது நவீன முதலீட்டின் மூலம் உங்கள் கம்பீரத்தைத் தக்கவைத்துக் கொள்வதா? முடிவு உங்கள் கையில்!
நிம்மதியான ஓய்வுக்காலத்தைத் திட்டமிடுவது எப்படி?
எத்தனை வயதில் SIP ஆரம்பிக்க வேண்டும்? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? SWP முறையில் பணத்தை முதலீடு செய்வது எப்படி? எவ்வளவு பணம் போட்டால் எவ்வளவு கிடைக்கும்? இத்திட்டத்தில் இணைய என்னென்ன ஆவணங்கள் தேவை? இதுபோன்ற அணைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள, அரசு ஊழியர்களுக்கு பிரத்தியேகமாக லாபம் நடத்தும் ஆன்லைன் வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.
மே 20, புதன் மாலை 7 மணிக்கு… முன்பதிவு கட்டாயம். முதலில் பதிவோருக்கே முன்னுரிமை. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள: