Rs 10 Crore Rent: Municipal Corporation Halts Salon Construction at Actor Ajay Devgn’s Home-ரூ.10 கோடி வாடகை: நடிகர் அஜய் தேவ்கன் வீட்டில் சலூன் கட்டுமான பணியை நிறுத்திய மாநகராட்சி நிர்வாகம்

Spread the love

கபோல் ஹவுசிங் சொசைட்டி புகார் அளித்ததை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் சொத்து உரிமையாளர்களிடம் உரிய ஆவணங்களைக் கோரியது. ஆனால் தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படாததால், கட்டுமானப் பணிகளை நிறுத்துவதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டது,” என்று தெரிவித்தார்.

ரூ.10 கோடி வாடகை

இருப்பினும், அஜய் தேவ்கன் தரப்பில் விசாரித்தபோது, “குறிப்பிட்ட வளாகத்தைப் வர்த்தக ரீதியில் பயன்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து பெறப்பட வேண்டிய அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள் முறையாகப் பெறப்பட்டுள்ளன” என்று தெரிவித்தனர்.

அஜய் தேவ்கன் தனது சொத்தை சலூன் மற்றும் ஸ்பா தொடங்க “ஃப்ளோரியன் ஹுரல் சலூன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (Florian Hurel Salons Pvt Ltd) நிறுவனத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு வாடகைக்கு விட அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தின்படி, முதல் ஆண்டில் மாத வாடகை ரூ. 16 லட்சமாகவும், ஆண்டுதோறும் 5% வாடகை உயர்வுடனும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஐந்து ஆண்டுகளுக்கான மொத்த வாடகைத் தொகை ரூ. 10.61 கோடி.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *