Rukmini: "யாரும் ஷேர் பண்ணாதீங்க" – பகிரப்படும் AI புகைப்படங்கள்; நடிகை ருக்மிணி வசந்த் புகார்

Spread the love

தன்னுடைய புகைப்படங்களை AI உதவியுடன் சித்திரித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக நடிகை ருக்மிணி வசந்த் புகார் அளித்திருக்கிறார்.

மேலும், டீப்ஃபேக் உதவியுடன் உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள் முற்றிலும் சித்திரிக்கப்பட்டவை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ருக்மிணி வசந்த்
ருக்மிணி வசந்த்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், “என்னுடைய படங்கள் என்று கூறி சமூக வலைத்தளங்களில் AI உதவியுடன் சில புகைப்படங்கள் பகிரப்படுவதை நான் கண்டறிந்தேன்.

அந்தப் படங்கள் முற்றிலும் போலியானவை மற்றும் ஜோடிக்கப்பட்டவை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இதுபோன்று படங்களை உருவாக்குவதும், சித்தரிப்பதும் தனியுரிமையை மீறும் செயலாகும். இவ்விவகாரத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக அணுகி வருகிறோம்.

இந்தப் படங்களை உருவாக்கியவர்கள் மற்றும் பரப்புபவர்கள் மீது தேவையான சட்டப்பூர்வ மற்றும் சைபர் கிரைம் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்.

ருக்மிணி வசந்த்
ருக்மிணி வசந்த்

இதுபோன்று உருவாக்கப்படும் புகைப்படங்களைப் பகிர்வதையோ அல்லது பரப்புவதையோ அனைவரும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *