Sai pallavi: “என் கணவர் பழி போடுறவறா இருக்கக் கூடாது; அவருக்கு சமைக்கத் தெரிஞ்சிருந்தா… ” – நடிகை சாய் பல்லவி | Actress Sai Pallavi has spoken about her future husband.

Spread the love

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் – தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க, இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான ‘கே.ஜி.எஃப்’ புகழ் யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் மற்றும் ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடித்துள்ளனர்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர், இந்தியாவின் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருபெரும் உலகளாவிய ஆளுமைகள் இணைந்து இப்படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கிறார்கள்.

ராமயணா படக்குழு

ராமயணா படக்குழு

அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. இந்த நிலையில், அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் “கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சி படமாக்கப்பட்டிருக்கிறது. தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக உருவாகியிருக்கும் இதில், நடிகை சாய் பல்லவி உள்ளிட்ட ராமாயணப் படக்குழுவினர் சிலர் பங்கேற்றிருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோக்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் ஒரு வீடியோவில் அமிதாப் பச்சன் சாய் பல்லவியிடம் ‘வருங்காலக் கணவர் குறித்து எதிர்பார்ப்பு என்ன?’ எனக் கேள்வி எழுப்பினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *