இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆஸ்தான கிதார் இசைக் கலைஞரான சதானந்தம் (79) சென்னையில் இன்று (அக்.29) காலமானார்.
ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆர். சுதர்சனம். அன்றைய காலக்கட்டத்தில் பல படங்களுக்கு இசையமைத்த இவரின் மகன்தான் சதானந்தம்.

சிறுவயதில் இருந்தே இசையில் ஆர்வம் கொண்ட சதானந்தம் கிதார் இசையில் கைதேர்ந்தவர். இசையமைப்பாளர் இளையராஜாவின் நண்பர். ஒரே ஆண்டில் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இருவரும் ஒன்றாக இசைக் கலைஞர்களாய் பணிபுரிந்த அனுபவத்தைப் பல மேடைகளில் இளையராஜா பகிர்ந்திருக்கிறார். இளையராஜா இசைக்குழுவில் 40 ஆண்டுகளுக்கு மேல் முதன்மை கிதார் கலைஞராகப் பணியாற்றியிருக்கிறார்.