Scene: “எங்களை விட நீங்கள் இந்த வெற்றியை அதிகமாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறீர்கள்!” – நெகிழும் சூர்யா | actor-suriya-releases-thank-you-video-for-the-success-of-scene-movie

Spread the love

அந்தக் காணொளியில் அவர், “அன்பான ரசிகர்கள், தம்பி தங்கைகள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் எனது மரியாதைகளும் நன்றிகளும்.

‘சீன்’ திரைப்படத்தைத் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து, விமர்சனங்கள் கொடுத்து, ஒவ்வொரு காட்சியையும் அலசி ஆராய்ந்து, டீகோடிங் செய்து, திருவிழா போலக் கொண்டாடி ஒரு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறீர்கள்.

பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால், அந்தப் படத்தில் நடித்தவர்கள், இயக்கியவர்கள் மற்றும் பணியாற்றிய படக்குழுவினர்தான் அதிகம் மகிழ்ச்சியடைவார்கள்.

ஆனால், எங்களை விட நீங்கள் இந்த வெற்றியை அதிகமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறீர்கள். இதற்கு எப்படி வார்த்தைகளால் நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. ஒட்டுமொத்தப் படக்குழுவின் சார்பாகவும் எனது மனமார்ந்த நன்றிகளையும் மரியாதைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஆண்டை மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கும், ‘சீன்’ திரைப்படத்தைக் கொண்டாடியதற்கும் மிக்க நன்றி.

இந்தப் படத்திற்கு ஆதரவளித்த அனைத்துத் திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், விமர்சகர்கள், சமூக வலைதளப் பிரபலங்கள், நலம் விரும்பிகள் மற்றும் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் எனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *