கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்ததற்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் “சீன்’ (Scene).
சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை ‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ படங்களை இயக்கிய சித்து மாதவன் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் சூர்யா உடன் நஸ்ரியா, லால் மற்றும் லுங்கிபாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுசின் ஷ்யாம் இசையமைத்திருக்கும் இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கிறது.

அந்தவகையில் நேற்று (நவ.3) தெலுங்கு ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றிருக்கிறது.
இதில் கலந்துகொண்ட பேசிய சூர்யா, ” ‘The One’ என்ற அடைமொழி என்பது நான் மட்டும் இல்லை நாம் அனைவரும் இணைந்த ஒன்றாகத்தான் அதைப் பார்க்கிறேன். நாம் அனைவரும் ஒரே குடும்பம். எப்போதும் நான் உங்களுடன் இருப்பேன்.