பேலன்ஸ் மட்டும்தானா..?
EPFO உடனான வாட்ஸ்ஆப் சாட்டில் பி.எஃப் பேலன்ஸ் மட்டுமல்ல… உங்களுடைய கடைசி 5 பரிவர்த்தனைகளைப் பார்க்க முடியும்.
உங்களுடைய பாஸ்புக்கையும் டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.
ஆனாலும், சின்னப் பிரச்னை!
இந்த வசதி கடந்த நவம்பர் 1-ம் தேதியிலிருந்துதான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. நம்முடைய உள்ளீடுகள் சில நேரங்களில் வேகமாகப் பிராசஸ் ஆவதில்லை. OTP லிங்க்கில் சில பிரச்னைகள் உள்ளன.
ஆனால், கொஞ்சம் நேரம் கழித்து முயற்சித்தால், நாம் செக் செய்ய நினைத்ததைப் பார்க்க முடிகிறது.
இருந்தாலும், இந்தச் சாட்பாட் விரைவாகச் செயல்படுவதும், தொழில்நுட்பக் கோளாறு இல்லாமல் செயல்படுத்துவதும் அரசின் பொறுப்பு.
இதனால், இது விரைவில் சரிசெய்யப்படும் என்று நம்புவோம்.