School students count the offerings at the Kulasekaranpattinam Mutharamman Temple-குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பள்ளி மாணவர்கள்

Spread the love

கல்லூரி மாணவர்களுக்கும் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில் அவர்களையும் காணிக்கை எண்ணும் பணிக்கு அழைத்ததும் தவறுதான்  என, பொதுமக்களும் பக்தர்களும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக  திருக்கோயில் செயல் அலுவலர் வள்ளிநாயகத்திடம் விளக்கம் கேட்டபோது, ”தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று  பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூர் வட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.  விடுமுறை என்பதால், காணிக்கை எண்ணும் பணிக்கு தேவைப்பட்டால் மாணவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என, குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டார்களாம்.

அன்னதானத்தில் உணவருந்திய மாணவர்கள்

அன்னதானத்தில் உணவருந்திய மாணவர்கள்

அதன் அடிப்படையிலேயே  கோயிலின் பிற ஊழியர்கள் மாணவர்களை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இதுகுறித்து பக்தர்களின் புகார் எனக்கு  தெரிய வந்ததும் மாணவர்களை  உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இருந்து விடுவித்ததுடன், மதியம் அன்னதானத்தில் மாணவர்களை சாப்பிட வைத்து வீட்டுக்கு அனுப்பி விட்டோம். இனி வரும் காலங்களில் உண்டியல் எண்ணும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என திருக்கோயில் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *