Senthil Balaji questioned the authorities about what was wrong with wearing a yellow bandana – ’மஞ்சள் துண்டு போடுவதில் என்ன பிரச்சனை?’ – அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய செந்தில் பாலாஜி!

Spread the love

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த தி.மு.க பூத் ஏஜெண்டுகள் மஞ்சள் நிற துண்டு அணிந்து வந்தனர். சில இடங்களில் மஞ்சள் துண்டு அணிய அனுமதிக்கப்பட்ட நிலையில், சில இடங்களில் மஞ்சள் துண்டு அணிய அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி வாக்குச்சாவடிகளில் பூத் ஏஜெண்ட்கள் அணிந்திருந்த மஞ்சள் நிற துண்டை, அதிகாரிகள் அகற்ற வைத்தனர். இது குறித்து பூத் ஏஜெண்ட்கள் வாக்குப்பதிவை பார்வையிட வந்த தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் முறையிட்டனர்.

அந்த மையத்தில் இருந்த ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று பார்த்த செந்தில் பாலாஜி, பூத் ஏஜெண்ட்கள் யாரும் மஞ்சள் நிற துண்டு அணியவில்லை என்பதை கவனித்தார். இதையடுத்து ’வாக்குச்சாவடிக்குள் கட்சி துண்டுதான் அணியக்கூடாது. ஆனால் பொதுவான மஞ்சள் நிற துண்டு அணிவதில் என்ன தவறு என்ன?’ என செந்தில் பாலாஜி தேர்தல் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். பூத் ஏஜெண்ட்களை மஞ்சள் நிற துண்டு அணிய அனுமதிக்க வேண்டும் என அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *