மேற்கு வங்க தேர்தல்: டிஎம்சி-பாஜக குற்றச்சாட்டு மோதல்|West Bengal Voting: Police Bias, Voter Threat Claims Emerge

Spread the love

இன்று மேற்கு வங்கத்தில் முதல்கட்ட சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது.

2011-ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்து வரும் திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, நான்காவது முறையாக ஆட்சியைத் தக்க வைப்பாரா என்கிற கேள்வி இருந்து வருகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்க அமைச்சர் சசி பாஞ்சா செய்தியாளர்கள் சந்திப்பில், “பூர்வா மேதினிபூர் மாவட்டக் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் பாஜகவிற்குச் சாதகமாக நடந்துகொள்கின்றனர்” என்று பேசியுள்ளார்.

சுவேந்து அதிகாரி

சுவேந்து அதிகாரி

மேலும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கும் இரண்டு போலீஸ் அதிகாரிகளை நீக்குமாறு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் புகாரளித்திருக்கின்றனர்.

இதற்கு பதில் தருவது போல, பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ சுவேந்து அதிகாரி, “வாக்காளர்களை திரிணாமுல் காங்கிரஸின் அடியாட்கள் மிரட்டுகின்றனர்.

பயங்கரக் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் மிக சுதந்திரமாக நடனமாடுகிறார்கள்… சில வாக்குச்சாவடிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால், வாக்காளர்களுக்கு நம்பிக்கை கொடுக்க அந்த இடங்களுக்கு நான் சென்று கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *