SIP முதலீட்டின் மூலம் 12% லாபம் எப்படிக் கிடைக்கும்? உங்கள் சந்தேகத்தைப் போக்கும் தெளிவான விளக்கம்!

Spread the love

நாளைய தினம் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள். இந்தியாவின் 80-வது சுதந்திரம் தினம் நாளை இந்தியா முழுக்க வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நன்னாளில் SIP முதலீட்டைப் பலரும் ஆரம்பிக்க வேண்டும் என ‘லாபம்’ தொடர்ந்து பேசியும், கட்டுரையும் எழுதி வருகிறது. SIP மூலம் மாதந்தோறும் ரூ.100, ரூ.250, ரூ.500 கூட சேர்க்கலாம் எனவும், இப்படி செய்யும் முதலீட்டுக்கு நீண்ட காலத்தில் ஆண்டுதோறும் 12% லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், இந்த முதலீட்டை ஆரம்பிப்பதற்கு என்னென்ன ஆவணங்களைத் தரவேண்டும் என்பது பற்றி விகடன்.காம்-ல் ஏற்கெனவே எழுதி இருந்தோம்.

Independence day celebration

அந்தக் கட்டுரையைப் படித்த விக்னேஷ்வரன் என்பவர், ”எந்த அடிப்படையில் 12 பெர்ஸன்ட் லாபம் என்று சொல்கிறீர்கள். எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று யாராலும் உறுதி தர முடியாது. பேராசை பட்டால் உள்ளதும் போய் விடும். சரியான முதலீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். தவறாக வழி காட்டாதீர்கள்…” என்று கமெண்ட் செய்திருக்கிறார். அவருக்கு ஒரு பதிலைச் சொல்வதன் மூலம் அவருக்கு மட்டுமல்ல, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி பல சந்தேகங்களுடன் இருப்பவர்களும் இந்த முதலீட்டைப் பற்றி ஒரு தெளிவை ஏற்படுத்த முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் லாபம் என்பது உத்தரவாதமானதல்ல. அதாவது, எஃப்.டி. போல, மியூச்சுவல் ஃபண்டில் இவ்வளவு சதவிகிதம் லாபம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. காரணம், மியூச்சுவல் ஃபண்டில் செய்யப்படும் முதலீடு பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. பங்குச் சந்தை நன்கு செயல்பட்டால், முதலீட்டாளருக்கு நல்ல லாபம் கிடைக்கும். இல்லாவிட்டால், லாபம் குறைவதற்கோ அல்லது நாம் முதலீடு செய்த பணம் 10% முதல் 20% வரை குறுகிய காலத்தில் குறைவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், இது குறுகிய காலத்திற்கு மட்டும்தான். அதாவது, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் நஷ்டம் வர வாய்ப்பு உண்டு. ஆனால், மூன்று, நான்காம் ஆண்டு முதல் லாபம் வரத் தொடங்கிவிடும் என்பதால், அப்போது லாபம், நஷ்டம் என்று இரண்டுமே இல்லாத நிலைக்கு வந்துவிடுவோம். அதற்கு லாபம் வரத் தொடங்கிவிடும் என்பதால், நஷ்டம் என்கிற பேச்சுக்கே இடமில்லை.

ஆக, மியூச்சுவல் ஃபண்டில் ஒருவர் முதலீடு செய்யவேண்டும் எனில், குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகளுக்கு மேல் முதலீட்டைத் தொடர்ந்து வைத்திருப்பது அவசியம். இது கட்டாயம் இல்லை என்றாலும், ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை வைத்திருக்கும்போது, குறைந்தபட்சம் 10% – 12% வரை லாபம் கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் SIP

அடுத்த முக்கியமான விஷயம், இந்தியப் பங்குச் சந்தையானது கடந்த 10 ஆண்டுகளில் தந்த வருமானத்தைக் கீழே தந்திருக்கிறோம். இதில் கடந்த 10 ஆண்டுகளில் தந்த வருமானம் எவ்வளவு என்று பாருங்கள். 80% பங்குச் சந்தை கேட்டகிரிகள் 12 சதவிகிதத்துக்கு மேலேயே வருமானம் தந்திருப்பதைப் பார்க்கலாம். மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் கேட்டகிரிகள் 15 சதவிகிதத்துக்கு மேலேயே லாபம் தந்திருக்கின்றன. இந்தியப் பங்குச் சந்தை கடந்த 10 ஆண்டுகளைப் போலவே அடுத்த 10 அல்லது 20 ஆண்டு காலத்துக்கு செயல்படும் எனில், கடந்த காலத்தில் கிடைத்த 12% வருமானம் எதிர்காலத்திலும் நீண்ட கால நோக்கில் செய்யப்படும் முதலீட்டில் கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்டில் கடந்த 20 ஆண்டு காலத்தில் ஆண்டுதோறும் 20% லாபம் தந்த திட்டங்களும் உள்ளன. ஒரு திட்டம் கடந்த 24 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 23% லாபம் தந்திருக்கிறது. இந்தத் திட்டத்தை நடத்தியது நம்மூர் நிறுவனமான டி.வி.எஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சுந்தரம் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஐ.பி SIP

சரி, ஆண்டுதோறும் 12% மியூச்சுவல் ஃபண்டில் கிடைக்க வாய்ப்பில்லை என்பவர்களால் வேறு எதில் கிடைக்கும் என்று சொல்ல முடியுமா? ரியல் எஸ்டேட்டிலும் தங்கத்திலும் கிடைக்கும் என்பார்கள். ஒரு சிலருக்கு ஆண்டுதோறும் 12% மேல் லாபம் கிடைத்திருக்கலாம். ஆனால், எல்லோருக்கும் கிடைத்திருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் கடந்த 10 ஆண்டுகளாக முதலீடு செய்த அனைவருக்குமே 12% லாபம் கிடைத்திருக்கும். அப்படிக் கிடைக்கவில்லை எனில், அவர்கள் தவறான ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்திருக்கலாம்!

தவிர, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது பேராசைப்படுவதல்ல. 12% வருமானம் என்பது நியாயமான எதிர்பார்ப்பு. கடந்த காலத்தில் பெரும்பாலான சமயங்களில் அது கிடைக்கவே செய்திருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் சரியான முதலீடா என்று கேட்டால், இன்றைய காலத்தில் இதைவிட சிறந்த முதலீடு இல்லை என்றே சொல்லலாம். இருப்பதற்கு ஒரு வீடு, கொஞ்சம் நகைகள் என்று இருந்தால் போதும், அடுத்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைத் தாராளமாகத் தேர்வு செய்யலாம். அது எந்தத் தவறும் இல்லை. அப்படிச் சொல்வது தவறுதலான வழிகாட்டலும் அல்ல!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி பொத்தாம் பொதுவாக ஏதாவது சொல்வதைவிட, ஒவ்வொருவரும் ரூ.100, ரூ.250, ரூ.500 என முதலீடு செய்து வந்தாலே போதும், அதைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வதுடன், நீண்ட கால நோக்கில் நல்ல லாபத்தையும் பார்ப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!

லாபம்

எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பிக்க வேண்டுமா?

மியூச்சுவல் ஃபண்டில் SIP முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்!

சபரிநாதன் – 89259 44569

தங்கலட்சுமி – 95007 77894

வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்…

வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

Labham Youtube Channel: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *