அந்தச் சிறிய வீட்டில் பகல் முழுதும் ஓயாமல் கேட்கிறது கைத்தறியின் சத்தம்.
அந்த நூல்களுக்கு நடுவேதான் ஒரு தந்தையின் வியர்வையும், ஒரு தாயின் கனவும் நெய்யப்பட்டு கொண்டிருந்தன. தான் பெற வேண்டும் என்று நினைத்த கல்வியை தனது இரு மகன்களையும் மருத்துவராக்கி வாழ்வில் சாதனை படைத்துள்ளார்.
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் உள்ள திருவள்ளுவர் கூட்டுறவு சொசைட்டியில் தினக்கூலிக்கு தறி நெய்து வரும் ஜெயராம் – லட்சுமி தம்பதிகளின் முதல் மகன் பிரவீன்குமார் மதுரை வாடிப்பட்டியில் கால்நடை உதவி மருத்துவராகவும், இரண்டாவது மகன் சுந்தர் ஸ்டான்லி கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
“கூட்டுறவு சொசைட்டியில் பருத்தி சேலைகளை நெய்து கொடுத்து மாதம் ரூ.10,000 வீதம் இருவரும் சம்பாதிக்கின்றோம். இரு மகன்களும் பள்ளி படிக்கும் போது அவர்களுடைய ஆசிரியர்கள் எங்களிடம், “இருவரும் நன்றாக படிக்கிறார்கள், அவர்கள் விருப்பத்திற்கு அவர்களை படிக்க வையுங்கள்” என்று கூறினார்கள்.
நான் நன்கு படித்தேன். ஆனால் என் தந்தை என்னை படிக்கவைக்கவில்லை. அதனால் அவர்கள் விரும்பியதை படிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்.
முதல் மகன் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் இளங்கலை கால்நடை அறிவியல் & கால்நடை பராமரிப்பு (BVSc&AH) படித்தான்.