Social media: “ஒரு வீடியோவுக்கு ரூ.1லட்சம் வரை வருமானம்” – Influencer-களுக்கு பீகார் அரசின் ஆஃபர்! | The government has provided an opportunity for social media influencers to earn up to ₹1 lakh per month.

Spread the love

பீகார் அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிடும் Social media creators-களுக்கு, ஒரு வீடியோவுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பீகார் மாநில முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் “பீகார் சமூக ஊடகம் மற்றும் பிற ஆன்லைன் ஊடக விதிகள், 2026′-ன் புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் 13 முன்மொழிவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், பீகார் மாநில அரசின் திட்டங்கள் குறித்து Content உருவாக்கும் சமூக ஊடகப் படைப்பாளர்கள் இனி ஒரு வீடியோவிற்கு ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கத் தகுதி பெறுவார்கள்.

பீகார் அரசின் ஊடக விதிகளின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் Content creators தங்கள் வீடியோ பெறும் ஒவ்வொரு 1 லட்சம்வீவ்ஸ்க்கும் ரூ.10,000 வழங்கப்படும். இந்தப் பணம் 30 நாட்களுக்குப் பிறகு வழங்கப்படும். ஒரு வீடியோவிற்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படலாம். இதுகுறித்த விரிவான அறிவிப்பைச் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை (IPRD) விரைவில் வெளியிடும் எனக் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *