Spider-Man: Brand New Day Review: பிரெண்ட்லி நெய்பர்ஹுட் ஹீரோவாக கலங்கடிக்கும் பீட்டர் பார்க்கர்! | Spider-Man: Brand New Day Review – Tom Holland Returns in a More Emotional, Grounded Adventure

Spread the love

சேடி சிங்கின் கதாபாத்திரம் படத்தின் மையமாக இருக்கிறது. அவரது பின்னணியை மர்மமாக வைத்து சஸ்பென்ஸை உடைக்கும் பாணி நன்றாக இருந்தாலும், அதன் காரணமாக அந்தக் கதாபாத்திரத்துக்குப் போதுமான நேரமும் அழுத்தமான பின்னணியும் கிடைக்காமல் போகிறது. இதனால் இறுதியில் அரங்கேறும் சில முடிவுகளும் மனமாற்றங்களும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

Spider-Man: Brand New Day

Spider-Man: Brand New Day

அவரது கதாபாத்திரத்தை மையமாக வைத்து, MCU-வின் அடுத்த முக்கிய அத்தியாயத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்கள். அது எப்படி விரிவடைகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

மொத்தத்தில், வாழ்க்கை குறித்த புரிதல், பீட்டர் பார்க்கரின் உள்ளார்ந்த போராட்டங்கள், தனிமை, பொறுப்பு ஆகியவற்றைப் பேசும் அதே நேரத்தில், ஸ்பைடர்மேன் படங்களுக்கே உரிய குறும்பு, சாகசம், ஆக்‌ஷனையும் தவறவிடாமல் ஒரு முழுமையான படத்தை கொடுத்திருக்கிறார் டெஸ்டின் டேனியல் கிரெட்டன். இதுவரை வெளியான டாம் ஹாலண்ட் ஸ்பைடர்மேன் படங்களிலேயே, ரசிகர்கள் எளிதாகத் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய படமாக இது இருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *