`Split Duple House’: கோவையில் பழைமையும் புதுமையும் கலந்த கனவு இல்லம்!| Split Duplex House in Coimbatore: Old Meets New

Spread the love

வீடு என்பது பெரும்பாலானோருக்கு தலைமுறைக் கனவு. வாய்ப்புகள் கூடி வந்து, ஆசை ஆசையாகக் கட்டியெழுப்பி, பல ஆண்டுகள் வாழ்ந்த ஒரு வீட்டை மாற்றியமைக்கவேண்டிய சூழல் வரும்போது, அதற்கு மனம் அவ்வளவு எளிதாக ஒப்புக்கொள்ளாது. பழைய வீட்டில் கிடைத்த அதே திருப்தியும், மனநிறைவும், நினைவுகளும் வேண்டும். கூடுதலாக இன்றைய தலைமுறைக்கான வசதிகளும் வேண்டும். இரண்டையும் ஒன்றாகச் சாத்தியப்படுத்த முடியுமா… அதற்கான பதிலாக நிற்கிறது கோயம்புத்தூரில் அமைந்திருக்கும் இந்த அழகிய வீடு!

 சஞ்சீவ் குமார்,  சஞ்சீவ் கிருஷ்ணன்

சஞ்சீவ் குமார், சஞ்சீவ் கிருஷ்ணன்

கோயம்புத்தூரில் 1.81 கிரவுண்ட் (10 சென்ட்) நிலத்தில் அமைந்துள்ள இந்த வீடு, பழைமைக்கும் புதுமைக்கும் இடையே அழகான பாலமாக நிற்கிறது. 1996-ல் கட்டப்பட்ட இந்த வீட்டை முழுவதுமாக இடிக்காமல், தரைத்தளமும் முதல் தளமும் மேம்படுத்தப்பட்டு, அதன் மேல் புதிதாக இரண்டாம் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 50 சதவிகிதம் பழைய கட்டுமானம், 50 சதவிகிதம் புதிய கட்டுமானம் என்றாலும், வெளிப்புறத் தோற்றம் 100 சதவிகிதம் புதிதாக மிளிர்கிறது.

இந்த மாற்றத்துக்குப் பின்னால் இருப்பவர்கள், Spacium Design Studio நிறுவனத்தின் இணை நிறுவனர்களும் முதன்மை ஆர்க்கிடெக்ட்டுகளுமான சஞ்சீவ் குமாரும் சஞ்சீவ் கிருஷ்ணனும். கோவையைச் சேர்ந்த சஞ்சீவ் குமாரும், கரூரைச் சேர்ந்த சஞ்சீவ் கிருஷ்ணனும் பெங்களூரு தயானந்த சாகர் கல்லூரி ஆஃப் ஆர்க்கிடெக்சரில் படித்த நண்பர்கள். இருவரும் இணைந்து 2021-ல் இந்த நிறுவனத்தைத் தொடங்கினர். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தனித்துவமான கான்செப்ட், அதன் பின்னால் ஒரு கதை என்பதே இவர்களின் பாணி. இந்த வீட்டுக்கு `Split Duple House’ என்ற மையக்கருத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தரைத்தளத்தில் வசிக்கும் முதியவர்களின் வாழ்க்கைமுறை பாதிக்காதவாறு, பழைய தேக்குமரக் கதவுகளும் மரச் சாமான்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேல்தளத்தில் இளம் தலைமுறைக்கான நவீன வசதிகளும் ஆட்டோமேஷனும் இடம்பெற்றுள்ளன. மூன்று தலைமுறையினர் ஒரே கூரையின் கீழ் வாழும் இந்த வீடு, பழைமையும் புதுமையும் எதிரானவை அல்ல என்பதற்கான அடையாளமாகத் திகழ்கிறது.

இந்த வீடு குறித்த முழுமையான கட்டுரையை படிக்க… இங்கே க்ளீக் செய்க…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *