ராணிப்பேட்டையில் 54 வயது பெண் மர்ம கொலை! கழுத்தில் இருந்த 10 சவரன் நகை மாயம்! இளைஞரிடம் விசாரணை | 54 years old woman was murdered and 10 sovereigns of gold robbed in Ranipet

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த 54 வயது பெண்ணை கொடூரமாக கொலை செய்து அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்கடப்பந்தாங்கல் வி.ஐ.பி சிட்டி பகுதியில் வசித்து வந்தவர் கீதா (54). இவர் தனியார் ஷூ தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவரது கணவர் சென்னையில் ஓட்டுநராக வேலை செய்து வரும் நிலையில் கீதா தனது மூத்த மகளுடன் வசித்து வந்தார்.

ranipet crime

இந்த நிலையில் நேற்று கீதா சொந்த வேலை காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில் அவர் மர்ம நபரால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். மேலும் அவரது கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க நகையும் பீரோவில் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணமும் கொள்ளை அடிக்கப்பட்டது.

இது தொடர்பாக ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் சிபின் தலைமையிலான போலீஸார் நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், கொலை சம்பந்தமாக மூன்று தணிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் கொலை நடந்த வீடு சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே தனிமையில் இருப்பதால் வீட்டில் அருகாமையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் சுங்கச்சாவடி ஆகிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராகளை ஆய்வு செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 35 வயது மதிக்கத்தக்க இளைஞரை பிடித்து வாலாஜாபேட்டை போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து 10 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *