SRH vs PBKS:”பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடம்; அதிரடி ஆட்டமே எங்களின் ரகசியம்!”– பேட் கம்மின்ஸ் பெருமிதம்|Sunrisers hyderabad captain pat cummins post match speech

Spread the love

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 6) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை வீழ்த்தி, ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்குப் பிறகு ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

வெற்றி குறித்து பேட் கம்மின்ஸ், “பஞ்சாப் அணி மிகவும் வலிமையான ஒரு அணி. அவர்களுக்கு எதிராக எங்கள் பேட்டர்கள் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்த விதம் மிகச்சிறப்பானது.

எவ்வளவு பெரிய ஸ்கோர் எடுத்தாலும், பஞ்சாப் போன்ற ஒரு அணிக்கு எதிராகப் பந்துவீசி வெற்றி பெறுவது எளிதல்ல; ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் இன்று மிகத் துல்லியமாகச் செயல்பட்டார்கள்.

நாங்கள் எப்போதும் எங்களது வேகத்திலேயே விளையாட விரும்புகிறோம். ஆரம்பத்தில் நிதானமாக ஆடுவது அபிஷேக் அல்லது டிராவிஸ் ஹெட்டின் ஸ்டைல் கிடையாது. ஒரு குறிப்பிட்ட ஸ்கோரை இலக்காக வைக்காமல், எவ்வளவு அதிக ரன்கள் எடுக்க முடியுமோ அவ்வளவு ரன்களை எடுக்கவே நாங்கள் முயல்கிறோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *