SRH vs RR: “இந்த வெற்றியின் மூலம் 2 புள்ளிகள் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி”- இஷான் கிஷன்| “Getting 2 points from this victory is a great.!” – said Ishan Kishan.

Spread the love

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல்.13) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டிக்கு பிறகு அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் இஷான் கிஷன், ” இந்த வெற்றியின் மூலம் எங்களுக்கு 2 புள்ளிகள் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

பந்துவீச்சாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட்டு, திட்டங்களைச் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தோம். அதை அவர்கள் சிறப்பாகச் செய்தார்கள். இந்த வெற்றி பந்துவீச்சாளர்களையே சேரும். இளம் பந்துவீச்சாளர்கள் கடுமையாக உழைத்தார்கள்.

பந்துவீச்சுப் பயிற்சியாளர் வருண் ஆரோனுடன் இணைந்து அவர்கள் நிறையப் பயிற்சிகளை மேற்கொண்டதோடு, அனுபவம் வாய்ந்த வீரர்களிடமும் ஆலோசனைகளைக் கேட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *