நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இறுதிக்கட்ட பரப்புரை பயணத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் காரைக்குடியில் அவர் கூடுதல் நாள்கள் செலவிட இருப்பதாகவும் சொல்கிறார்கள் அக்கட்சியின் முக்கியப் புள்ளிகள்.
நம்மிடம் பேசியவர்கள், “கடந்த மார்ச் 23-ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் பிரசாரத்தை தொடங்கினார் அண்ணன் சீமான், தற்போதுவரை டெல்டா மண்டலம் நீங்களாக மற்ற மண்டல பிரசாரங்களை ஓரளவுக்கு நிறைவு செய்துவிட்டார். அவரது பரப்புரை பயணத்தில் தென்மாவட்டங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் இதுவரை கூடாத கூட்டத்தை பார்த்தோம். மற்ற மண்டலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இச்சூழலில் இறுதிகட்ட பரப்புரை பயணம் காரைக்குடியை மையப்படுத்தி அமையவுள்ளது” என்றனர்.