Strait of Hormuz: வேலையை காட்ட துவங்கியது ஈரான்.. இனி யாராலும் கண்ட்ரோல் செய்ய முடியாது? | Iran Asserts Control Over Strait of Hormuz; Ships to Need Permission and Face Possible Insurance Fees

Spread the love

International

oi-Prasanna Venkatesh

உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையின் மீது ஈரான் தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 60 நாள் பேச்சுவார்த்தையை துவங்கும் வழியை இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இயக்கங்களின் தாக்குத்தலுக்கு நேற்று முட்டுக்கட்டை போட்டப்பட்ட நிலையில் அடுத்த சில நாட்களில் துவங்க உள்ளது.

இந்த நீரிணை வழியாக செல்லும் அனைத்து கப்பல்களும் ஈரானின் அனுமதியுடன் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது. இது, உலக எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

iran Hormuz war

ஹார்முஸ் நீரிணை – ஈரானின் புதிய விதிகள்

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் அனைத்து கப்பல்களும் கட்டாயமாக ஈரானின் இன்சூரன்ஸ் பாலிசியை பெற வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இந்த இன்சூரன்ஸ் தற்போது அடுத்த 60 நாட்களுக்கு இலவசமாக இருக்கும் என்றாலும், அதற்குப் பிறகு கட்டணம் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கப்பல்கள் ஈரான் நிர்ணயித்த பாதையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும், வேறு எந்த மாற்றுப் பாதையும் அனுமதிக்கப்படாது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, ஹார்முஸ் நீரிணையின் மீது ஈரான் முழு கட்டுப்பாட்டை நிறுவுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் என பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?

அமெரிக்காவுடன் சமீபத்தில் கையெழுத்தான 14 அம்ச ஒப்பந்தத்தில், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு அடுத்த 60 நாட்களுக்கு கட்டணமின்றி அனுமதி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஈரானின் சமீபத்திய அறிவிப்பு, இந்த ஒப்பந்தத்திற்கு அப்பால் தனது அதிகாரத்தை நீட்டிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை, ஈரான் தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்கவும், எதிர்காலத்தில் இந்த முக்கிய நீரிணையின் மீது முழு கட்டுப்பாட்டைப் பெறவும் திட்டமிடுவதாகக் கருதப்படுகிறது.

உலக எண்ணெய் வர்த்தகத்தில் தாக்கம்

ஹார்முஸ் நீரிணை, உலகின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் முக்கிய வழித்தடமாகும். இங்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் அல்லது கட்டணங்கள் விதிக்கப்பட்டால், உலகளாவிய எண்ணெய் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். குறிப்பாக இந்தியா, சீனா போன்ற நாடுகளின் எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்படக்கூடும்.

ஈரானின் இந்த அறிவிப்பு, அமெரிக்காவுடனான சமீபத்திய அமைதி முயற்சிகளுக்கு இடையில், தனது மூலோபாய நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முக்கிய அடியாக பார்க்கப்படுகிறது. அடுத்த 60 நாட்களில் இந்த விவகாரம் எப்படி முன்னேறுகிறது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *