Sudden fire at a firecracker factory in Sivakasi that had been closed for 10 years; how did three people get injured-சிவகாசியில் 10 ஆண்டுகளாக மூடிக்கிடந்த பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து

Spread the love

 விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவருக்குச் சொந்தமான  ’திபிரில்லியண்ட்’ பட்டாசுத் தொழிற்சாலை நாரணபுரம் –  செங்கமலப்பட்டி சாலையில் செயல்பட்டு வந்தது.

உடல்நலக்குறைவால் முத்தையா  இறந்த பிறகு தொழிற்சாலையின் உரிமம் வேறு பெயருக்கு மாற்றப்படாமல் குடும்பத்திலுள்ளவர்களிடையே ஏற்பட்ட சொத்துப் பிரச்சனை காரணமாக கடந்த 10  வருடங்களாக செயல்படாமல் மூடிக்கிடக்கிறது. பூட்டிக்கிடக்கும் இந்த பட்டாசுத் தொழிற்சாலை வளாகத்தை சமூகவிரோதிகள் மது அருந்துதல் போன்ற செயல்பாட்டுக்கான கூடாரமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.  

தீ விபத்து ஏற்பட்ட அறை

தீ விபத்து ஏற்பட்ட அறை

இந்த நிலையில், இந்த  தொழிற்சாலையின்  அருகிலுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹரிபரத், சுபாஷ் மற்றும்  மாரிச்செல்வம்  ஆகிய மூன்று இளைஞர்கள், இந்த தொழிற்சாலையின் ஒரு அறையில்  புகைப்பிடித்துவிட்டு  சிகரெட்டை அணைக்காமல் அந்த சிகரெட்துண்டுகளை அப்படியே தூக்கி வீசிப் போட்டுள்ளனர். சிகிரெட் துண்டிலிருந்த நெடுப்பு பட்டு  அங்கிருந்த கழிவுபட்டாசுப் பொருள்களுடன் கிடந்த கருந்திரியில் பட்டு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *