Suicide 48 Days After Marriage: Doctor Installed Surveillance Cameras Throughout the House to Monitor Wife – திருமணமான 48 நாளில் தற்கொலை: மனைவியை கண்காணிக்க வீடு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்திய டாக்டர்

Spread the love

மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் வசிக்கும் டாக்டர் நிதின் என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி தான் விஷாகா(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில நாட்களில் நிலைமை மாறியது. திருமணத்தின் போது விஷாகாவின் பெற்றோர் எதிர்பார்த்த அளவுக்கு பணம், கிப்ட்கள் கொடுக்கவில்லை என்று நிதின் பெற்றோர் கருதினர். இதனால் விஷாகாவிடம் அடிக்கடி டாக்டர் நிதின் பெற்றோர் வீட்டில் சென்று நகை, பணம் வாங்கி வரும்படி கூறி நிர்ப்பந்தம் செய்து வந்தனர். அதோடு விஷாகா வீட்டில் உள்ளவர்களை தவிர வேறு யாரிடமும் பேச விஷாகாவிற்கு தடை விகிக்கப்பட்டு இருந்தது.

டாக்டர் நிதின் தனது வீட்டிற்குள்ளும், வீட்டிற்கு வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்தி மனைவியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்தார்.

விஷாகா யாரிடமாவது பேசினால் கொடூரமாக தாக்கப்பட்டார். டாக்டர் நிதின் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்துவிட்டு யாரிடமாவது விஷாகா பேசி இருந்தால் உடனே அடித்து உதைப்பது வழக்கம் என்கிறார்கள். இது குறித்து விஷாகா தனது பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார்.

இதையடுத்து விஷாகாவை தங்களது வீட்டிற்கு அழைத்து வர அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அதற்குள் விஷாகா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் பேசியதற்காக அவரை நிதின் கொடூரமாக அடித்து உதைத்துள்ளார். விஷாகாவிற்கு எந்த ஒரு சுதந்திரமும் இல்லாமல் சிறையில் இருப்பது போன்று வாழ்ந்து வந்தார். எனவே விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக விஷாகாவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

விஷாகாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நிதின் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. திருமணமாகி 48 நாட்களில் விஷாகா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை தடுப்பு மையம்

தற்கொலை தடுப்பு மையம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *