Suriya 48: மீண்டும் 'ஜெய் பீம்' கூட்டணி; கயாடு லோஹர் – சாய் அபயங்கர்! – 'சூர்யா 48' அப்டேட்ஸ்

Spread the love

சூர்யா நடித்திருந்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மே 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான அப்படத்திற்கு வசூல் ரீதியான நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 46-ஆவது படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Suriya 46 - Viswanath & Sons
Suriya 46 – Viswanath & Sons

மற்றொரு பக்கம் சூர்யாவின் 47-ஆவது படத்தை, ‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்குகிறார். அதன் படப்பிடிப்பும் பரபரப்பாக நடந்து வருகிறது. நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார்.

இப்படத்திற்குப் பிறகு ‘ஜெய் பீம்’ த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் எனத் தகவல்கள் பேசப்பட்டன. தற்போது அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’ போன்ற படங்களைத் தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. ‘கருப்பு’ படத்தைத் தொடர்ந்து சாய் அபயங்கர், சூர்யாவின் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார்.

கயாடு லோஹர் நாயகியாகக் கமிட் ஆகியிருக்கிறார். ‘ஜெய் பீம்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பதால், ரசிகர்களிடம் இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சூர்யாவுடன் இணைவது பற்றி அறிவித்திருக்கும் ஹோம்பாலே நிறுவனம், “நிஜ மனிதர்களின் வாழ்க்கை பாரத்தைச் சுமந்த கதாபாத்திரங்கள். ஒவ்வொரு முறையும், வசதியான பாதையைத் தவிர்த்து, துணிச்சலான பாதையையே தேர்ந்தெடுத்த ஒரு கலைப்பயணம்.

திரையில் முப்பது ஆண்டுகால உண்மை. திரைக்கு வெளியே தொட்டுச் சென்ற கோடிக்கணக்கான இதயங்கள். தன் தலைமுறையின் மிகத் துணிச்சலான ஒரு நடிகன், தனது பிரம்மாண்டமான மேடையைச் சந்திக்கும் தருணம். ஹோம்பாலே ஃபிலிம்ஸ் பெருமையுடன் சூர்யாவை வரவேற்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *