TIME 100: “இந்தப் பயணம் என்னுடையது மட்டுமல்ல” – இயக்குநர் பா.ரஞ்சித்| TIME 100: “This journey is not mine alone” – Director Pa. Ranjith

Spread the love

அமெரிக்காவின் புகழ்பெற்ற “டைம்’ (TIME) இதழ், தனது 103 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கான பிரத்யேக சர்வதேசப் பட்டியலான ‘டைம் 100 நெக்ஸ்ட் இந்தியா’ (TIME100 Next India) பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஏழு மாத காலத் தீவிரப் பணிகளுக்குப் பிறகு, நேற்று (நவம்பர் 19-ம் தேதி) அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் தென்னிந்திய நடிகர்கள் துல்கர் சல்மான், சாய் பல்லவி, பார்வதி, இசையமைப்பாளர் அனிருத், தெருக்குரல் அறிவு, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருக்கின்றனர்.

இயக்குநர் பா.ரஞ்சித்

இயக்குநர் பா.ரஞ்சித்

இது குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில், “TIME 100 Next India பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதை எண்ணி மிகவும் பணிவும், ஆழ்ந்த நன்றியுணர்வும் கொள்கிறேன். இந்தப் பயணம் ஒருபோதும் என்னுடையது மட்டுமாக இருந்ததில்லை. எண்ணற்ற மனிதர்கள், பகிரப்பட்ட கனவுகள், கூட்டு முயற்சிகள் மற்றும் என் குழுவினர், சக படைப்பாளிகள், கலைஞர்கள் என என்னுடன் துணைநின்று என் படைப்புகளின் மீது நம்பிக்கை வைத்த அனைவரின் அசைக்க முடியாத ஆதரவாலும் செதுக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *