மென்டார் ஊக்குவிப்பு பந்துவீச்சு திட்டம்!
ஒரே ஒரு பந்துக்காக மைதானத்துக்குள் இறங்க வேண்டுமா, மாஸ் பிஜிஎம்மோடு பில்டப்பாக க்ரீஸூக்குள் இறங்கி சிங்கிள் தட்டினால் சங்கடமாக இருக்குமே என மென்டார்கள் யோசிக்கக்கூடாது என்பதற்காகவே இந்தத் திட்டம். இதன்படி மென்டார்கள் கடைசி பந்தில் ஸ்ட்ரைக் எடுக்கையில் மட்டும் பௌலர் நல்ல ஃபுல் லெந்தில் காலுக்குள் வாட்டமாக சிக்சர் அடிக்கும்படி பந்துவீச வேண்டும். வேறு எதாவது லெந்தில் வீசி மெண்டாரை திணறடித்தால் நோ – பால் வழங்கப்படும்.

வெற்றி மென்டார் சுண்டுதல் திட்டம்:
ஒருவேளை மென்டார்கள் பேட்டிங் ஆடவே விருப்பப்படவில்லை எனில், டாஸூக்கு கேப்டனுக்கு பதிலாக மெண்டார்தான் வர வேண்டுமென கடும் நிபந்தனை விதிக்கலாம். டாஸில் ரவிசாஸ்திரியுடன் 5 நிமிடமும் Post Match Presentation இல் ஹர்ஷாவுடன் 5 நிமிடமும் மெண்டாரை பேச வைக்கலாம். ‘Definitely Not’ ‘comeback that’s what we known for…’ ‘ரெண்டே ரெண்டு பேருக்குதான் போட்டியே.. ‘ என ரசிகர்கள் சில்லறையை சிதறவிடும்படி ஒரு மேட்ச்சுக்கு இரண்டு பன்ச்களை மெண்டார்கள் பேசியே ஆக வேண்டுமென்றும் ஒரு பாய்ண்ட் சேர்த்துக் கொள்ளலாம்.
சிறப்பு ‘தல’ தரிசனம்:
தோனி ஆடும்போது சேப்பாக்கத்தில் ப்ளாக்கில் பல மடங்கு அதிக விலையில் டிக்கெட் விற்பார்கள். தோனி இல்லை என்பதால் சேப்பாக்கத்தின் டிக்கெட் வருவாய் குறைய வாய்ப்பிருக்கிறது. அதை ஈடுகட்ட மெண்டாராக தோனி அமர்ந்திருக்கும் பெவிலியனுக்கு அருகே இருக்கும் ஸ்டாண்டுக்கு மட்டும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை போடலாம். வரிசையில் ரசிகர்களை விட்டு தோனியை பார்க்க பார்க்க அப்படியே வெளியே இழுத்து விடலாம்.
மலிவு விலையில் ஒரு மேட்ச்சுக்கு இப்படியாக 50000 தரிசன டிக்கெட்டுகளை ரிலீஸ் செய்தால், சேப்பாக்கம் தனது வருவாயை தக்கவைத்துக் கொள்ள முடியும். அதேமாதிரி, சேனல் வியூவர்ஷிப் கம்மி ஆகாமல் தடுக்கவும் ஒரு வழி இருக்கிறது திரையரங்குகளில் படங்களை ரீ ரிலீஸ் செய்வதைப் போல ருத்து தலைமையில் சென்னை ஆடும் கொட்டாவி போட்டிகளின் போது, தோனி மிரட்டிய பழைய போட்டிகளை ரீ டெலிகாஸ்ட் செய்யலாம். உறுதியாக லைவ்வில் நடக்கும் போட்டியை விட ரீ டெலிகாஸ்ட் செய்யப்படும் போட்டிக்கு அதிக வியூவர்ஷிப் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இந்த ‘வெற்றி Mentor திட்ட’த்தில் வேறு என்னென்ன விஷயங்களை சேர்க்கலாம் என கமெண்ட் செய்யுங்கள்.