Doctor Vikatan: எந்த க்ரீமும் ஹெல்ப் பண்ணலையா… உங்க ஸ்கின் இன்ஸ்டன்ட்டா Glow ஆகணுமா?

Spread the love

Doctor Vikatan: என் வயது 40. மாநிறமாக இருப்பேன். நான் மாதம் தவறாமல் ஃபேஷியல் செய்துகொள்வேன். காஸ்ட்லியான காஸ்மெட்டிக்ஸ்தான் உபயோகிக்கிறேன். என்ன செய்தும் என் சருமத்தில் மாற்றம் தெரியவில்லை.  சருமத்தை இன்ஸ்டன்ட்டாக  glow ஆகச் செய்ய வழிகளே இல்லையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம் .

சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்
சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். பொலிவான சருமம் என்பது சிவப்பான சருமம் என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு நபருக்கும் இயற்கையான சரும நிறம் என ஒன்று இருக்கும். அதை நாம் மாற்ற முயலக் கூடாது. ஆரோக்கியமான, பொலிவான சருமம் என்பது மிருதுவாக இருக்கும். வறட்சியின்றி  ஈரப்பதத்துடன் இருக்கும். சரும நிறம் சீராக இருக்கும்.சிவந்து போதல், எரிச்சல் மற்றும் கருமை (pigmentation) குறைவாக இருக்கும்.

நமது சருமத்தை மேம்படுத்த நாம் சில விஷயங்களைச் செய்யலாம். அவற்றில் முதலிடம் சூரிய ஒளியின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது. சரும ஆரோக்கியத்தில் முதல் மற்றும் மிக முக்கியமானது சன்ஸ்கிரீன்  (Sunscreen) பயன்படுத்துவதாகும்.

சருமம் கருத்துப்போவது, நிற மாற்றம், பொலிவற்ற சருமம், சுருக்கங்கள் மற்றும் முதிர்ந்த தோற்றம் எனப் பல பிரச்னைகளுக்கும் சூரிய வெளிச்சம்தான் முக்கிய காரணம். தினமும் காலையில் SPF 30 முதல் 50 கொண்ட சன்ஸ்கிரீனை (broad-spectrum sunscreen) பயன்படுத்துங்கள்.

உங்கள் முகம், காதுகள் மற்றும் கழுத்துப் பகுதியில் சரியாகத் தடவுங்கள். நீங்கள் வெளியில் இருந்தாலோ, வியர்த்தாலோ அல்லது நீச்சல் அடித்தாலோ, இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் சன் ஸ்கிரீன் தடவவும். உங்களுக்கு மங்கு (melasma) அல்லது கரும் புள்ளிகள் இருந்தால், ‘அயன் ஆக்ஸைடு’ (iron oxide) கொண்ட டின்டெட் (tinted) சன்ஸ்கிரீன்  சிறந்த பாதுகாப்பைத் தரும்.

உங்களுக்கு மங்கு (melasma) அல்லது கரும் புள்ளிகள் இருந்தால், ‘அயன் ஆக்ஸைடு’ (iron oxide) கொண்ட டின்டெட் (tinted) சன்ஸ்கிரீன் சிறந்த பாதுகாப்பைத் தரும்.

அடுத்தது சரியான சரும பராமரிப்பு பொருள்களைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். அந்த வகையில் வைட்டமின் சி சீரம் முக்கியத்துவம் பெறுகிறது. இது சீரற்ற சரும நிறம் மற்றும் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்ய உதவும்.

மேலும், இது கொலாஜென் உற்பத்திக்கும் உதவும். ஆனால், அனைத்து வைட்டமின்  சி சீரம்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தயாரிப்பின் தரம் மற்றும் ஃபார்முலா மிகவும் முக்கியம். இதை உபயோகிப்பதற்கு முன்  பேட்ச் டெஸ்ட் (patch test) செய்யுங்கள். இது எரிச்சல், சிவந்து போதல், முகப்பரு அல்லது சருமம் உரிந்துபோவதை ஏற்படுத்தினால், பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் வேறு சாய்ஸ் கேட்கலாம்.

சருமப் பராமரிப்பில் ரெட்டினால் (Retinol) மிக முக்கியம். இது மெல்லிய கோடுகள், சொரசொரப்பான சருமம், முகப்பரு, அடைபட்ட சருமத் துவாரங்கள் மற்றும் கருமைக்கு உதவும். ரெட்டினாலை இரவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

முகம் முழுவதற்கும் ஒரு பட்டாணி அளவு போதுமானது. தொடக்கத்தில், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாள்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு  நல்ல மாய்ஸ்ச்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். 

கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பத்திற்குத் திட்டமிடுபவர்கள் ரெட்டினால் அல்லது பிற ரெட்டினாய்டுகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் கேட்டுக்கொள்ள  வேண்டும்.

நியாசினமைடு (Niacinamide) என்பது எண்ணெய்ப்பசையான சருமம், சென்சிட்டிவ்வான அல்லது சீரற்ற சருமம் உள்ளவர்களுக்கு  நல்ல தேர்வாகும். இது அதிகப்படியான எண்ணெய்யைக் கட்டுப்படுத்தவும், சிவந்துபோவதைக் குறைக்கவும், சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை (skin barrier) பலப்படுத்தவும் உதவும். பெரும்பாலான மக்களுக்குச் சுமார் 4 முதல் 5 சதவிகிதம் நியாசினமைடு போதுமானது.

சருமப் பராமரிப்பில் ரெட்டினால் (Retinol) மிக முக்கியம். இது மெல்லிய கோடுகள், சொரசொரப்பான சருமம், முகப்பரு, அடைபட்ட சருமத் துவாரங்கள் மற்றும் கருமைக்கு உதவும். care

அசெலாயிக் அமிலம் (Azelaic Acid) என்பது முகப்பரு, வடுக்கள், மங்கு மற்றும் சீரற்ற சரும நிறத்திற்கு உதவும். ஆனால், கருமைக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலில் காரணத்தைப் புரிந்து கொண்டு, பிறகு சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதே நல்லது.

வறண்ட மற்றும் சேதமடைந்த சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்க வாய்ப்பில்லை. எனவே, உங்கள் சரும வகைக்கு ஏற்ற மாய்ஸ்ச்சரைசரைத் தேர்ந்தெடுங்கள். செராமைடுகள் (ceramides), கிளிசரின் மற்றும் ஹைலூரானிக் அமிலம் போன்ற பொருள்கள் சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும்.

எண்ணெய்ப் பசை சருமத்திற்கும் மாய்ஸ்ச்சரைசர் தேவை. சருமத் துவாரங்களை அடைக்காத லேசான, நான்-காமிடோஜெனிக் (non-comedogenic) வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நமது சருமம் இறந்த செல்களை இயற்கையாகவே நீக்குகிறது. ஆனால், சில சமயங்களில் இந்த இறந்த செல்கள் மேற்பரப்பில் சேகரிக்கப்பட்டு சருமத்தை சொரசொரப்பாகவும் மந்தமாகவும் மாற்றும்.

எனவே, வாரத்திற்கு ஒரு முறை மென்மையான எக்ஸ்ஃபோலியேஷன் (Exfoliation) மிகவும் அவசியம். ஆனால், தினமும் உங்கள் முகத்தை ஸ்க்ரப் செய்யாதீர்கள்.

அதிகமாக ஸ்க்ரப் செய்வதோ அல்லது அடிக்கடி பார்லரில் போய்  பீலிங் செய்வதோ சருமத்தின் பாதுகாப்பு அடுக்கைச் சேதப்படுத்தும். இது எரிச்சல், சிவந்துபோதல் மற்றும் அதிக கருமையைக்கூட ஏற்படுத்தலாம்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த மென்மையான பொருள்கள் சிலவற்றைப் பயன்படுத்தலாம். சுத்தமான கற்றாழை ஜெல் சருமத்தைக் குளுமையாகவும் ஈரப்பததத்துடன் இருக்கவும் உதவும். சுத்தமான, வாசனை சேர்க்கப்படாத கற்றாழை ஜெல் உபயோகிக்கவும். கற்றாழைகூட அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம் என்பதால் முதலில் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

கற்றாழைகூட அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம் என்பதால் முதலில் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

அதிமதுரத்தின் சாறு சருமத்தின் கருமையைப் போக்க உதவும். சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் நேரடியாக பச்சை அதிமதுரப் பொடியை சருமத்தில் தேய்க்க வேண்டாம்.

ரோஸ் வாட்டர் எனப்படும் பன்னீரை, புத்துணர்ச்சியூட்டும் ஃபேஸ் மிஸ்ட்டாகப் பயன்படுத்தலாம். ஆல்கஹால், செயற்கை நிறம் அல்லது கூடுதல் வாசனை திரவியங்கள் இல்லாத சுத்தமான ரோஸ் வாட்டரைத் தேர்ந்தெடுக்கவும். 

உங்கள் தூக்கம், உணவு, செரிமானம், மன அழுத்தம் போன்றவற்றுக்கும் உங்கள் சரும ஆரோக்கியத்துடன் தொடர்புண்டு. பல வண்ணப் பழங்கள் மற்றும் காய்கறிகள், போதுமான புரதம், நட்ஸ் மற்றும் சீட்ஸைச் சாப்பிடுங்கள். நெல்லிக்காய், மாதுளை, ஆரஞ்சு மற்றும் பிற பழங்களில் சருமத்துக்கு நல்லது செய்யும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. 

தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள். கூடுதல் தண்ணீர் குடிப்பதால் மட்டுமே வறண்ட சருமம் அல்லது கருமையை மாற்றிவிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். புகைப்பழக்கத்தையும் மது அருந்துவதையும் தவிர்க்கவும். நீண்ட கால மன அழுத்தம், போதிய தூக்கமின்மை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை ஆகியவை சருமத்தை சோர்வாகக் காட்டுவதோடு, சருமத்தின் பாதுகாப்பு லேயரையும் பலவீனப்படுத்தும்.

தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.

இரவில்,  உங்கள் மேக்கப் மற்றும் சன்ஸ்கிரீனைச் சரியாக நீக்குங்கள். உங்கள் சருமப் பிரச்னைக்கு ஏற்ற தயாரிப்பைப் பயன்படுத்துங்கள். ஒரே நேரத்தில் பல பொருள்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. 

எலுமிச்சைப்பழச் சாறு, பேக்கிங் சோடா, டூத் பேஸ்ட் அல்லது எசென்ஷியல் ஆயில்களை உங்கள் முகத்தில் தடவாதீர்கள். இவை சருமத்தில் எரிச்சலைக் கிளப்பி, கருமை அடையச் செய்யலாம். உங்கள் சரும நிறத்தை அதிகரிக்க நினைக்காமல், அதை ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும், ஈரப்பதத்துடனும், சீரான நிறத்துடனும்  வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். 

டாக்டர் தலத் சலீம்:

சென்னை, கீழ்ப்பாக்கம் கார்டனில் செஹட் த ஸ்கின் அண்ட் ஹேர் கிளினிக்கின் உரிமையாளர். சருமம், கூந்தல் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒன்றிணைந்த சிகிச்சைகள் மூலம் தீர்வுகள் அளிப்பவர். 26 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *