TN Exit Poll 2026 LIVE : அரியனணயில் அமரபோவது யார்? – வெளியாகயிருக்கும் எக்ஸிட் போல் முடிவுகள்! | Tamil Nadu Exit Poll 2026 LIVE updates

Spread the love

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க போவது யார்?

தமிழ்நாடு, புதுச்சேரி, அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

கடந்த ஏப்ரல் 9, ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என மூன்று தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தவிர இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடக்கும் மேற்குவங்கம் மாநிலத்திற்கு முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 23ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று (ஏப்ரல் 29) நடைபெறுகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த மார்ச் 30ஆம் தேதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதற்கிடையில் கூட்டணி கட்சிகள் உடன் பேச்சுவார்த்தை, சீட் ஒதுக்கீடு, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என களம் சூடுபிடித்தது.

ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு அரசியல் களம் சூடுபிடித்தது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் நடந்த 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் வாக்குபதிவுகள் பதிவாகியிருந்தன.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான 78.29% வாக்குப்பதிவே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அதனை முறியடித்து 84.69% வாக்குகள் பதிவாகி இருந்தன.

மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் அனைவரும் எதிர்பார்த்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று மாலை 6.30 மணி முதல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவுள்ளன.

எக்ஸிட் போல் முடிவுகளை அறிந்து கொள்ள தொடர்ந்து இணைந்து இருங்கள்..!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *