‘அமர்க்களம்’ படத்துல நடிச்சதைப் பார்த்து அஜித் சாரே ‘முகவரி’ படத்துக்கும் சிபாரிசு செஞ்சார். | my dear bootham actor goutham now settled in dubai

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பான “மை டியர் பூதம்’ நிகழ்ச்சி ஞாபகமிருக்கிறதா?

வியட்நாம் வீடு சுந்தரம், வையாபுரி, சங்கீதா பாலன், ராஜ்கமல் – லதாராவ், டி பி கஜேந்திரன் என சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் ஒருபுறமும், மாஸ்டர் பரத், கௌதம் என குழந்தை நட்சத்திரங்கள் மறுபுறமுமாக நடிக்க சுமார் ஆயிரம் எபிசோடுகள் ஒளிபரப்பான தொடர்.

இந்த தொடரில் கௌதம் என்கிற கேரக்டரில் நடித்த அந்தச் சிறுவனும் அந்தக் காலத்தில் ரொம்பவே பிரபலம். ‘அமர்க்களம்’, ‘முகவரி’ ஆகிய படங்களில் சிறுவயது அஜித்தாக நடித்த அந்த கௌதம் மேலும் சில சீரியல்கள் மற்றும் படங்களிலும் நடித்திருந்தார்.

தற்போது இவர் எங்கே இருக்கிறார்? டிவி, சினிமா என எங்கும் இவரது முகம் தென்படவில்லையே எனத் தேடிய போது, ‘அவர் இப்போது துபாயில் செட்டில் ஆகி விட்டார்’ என்கிற தகவல் கிடைத்தது.

அவருக்கு நன்கு நெருக்கமான சிலர் மூலம் துபாயிலிருந்தவரை லைனில் பிடித்தோம்.

”நடிப்பை விட்டு விலகி வருஷக் கணக்குல ஆச்சே, இப்ப என்ன பேசறது’ எனத் தயங்கியவரை கன்வின்ஸ் செய்து உரையாடலைத் தொடர வைத்தோம்..

”சின்ன வயசுல குழந்தை நட்சத்திரமா நடிக்கத் தொடங்கினேன். என்னுடைய சித்தப்பா நீலகண்டன் ஏற்கனவே சினிமா லைன்ல இருந்ததால் அவர் மூலமா நானும் நடிக்கத் தொடங்கினேன். ராஜ் டிவி, ஜெயா டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடிச்சேன். டிவியில முகம் வந்ததும் சினிமா வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பிச்சது.

பதினைஞ்சு படங்கள் பன்னியிருப்பேன்னு நினைக்கேன். முக்கியமான படங்கள்னா ‘அமர்க்களம்’, ‘முகவரி’ படங்களைக் குறிப்பிடலாம். ‘அமர்க்களம்’ படத்துல நடிச்சதைப் பார்த்து அஜித் சாரே ‘முகவரி’ படத்துக்கும் சிபாரிசு செஞ்சார்.

டிவியில ‘மை டியர் பூதம்’ எனக்கு ரொம்பவே பேர் வாங்கித் தந்த தொடர். முதல் எபிசோடுல இருந்து கடைசி எபிசோடு வ்ரை அந்த தொடரில் நடிச்சிருந்தேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *